ஆதியும் அந்தமும் ஆனவா ஆறுமுகா!
ஆதிக்கே ஆசானாய் ஆகிய அந்தணா!
ஆதிசக்தி அருவேலால் அகிலமும் வென்றோன!
ஆண்டியே எனினும் அகிலத் தழகோனே!
பாதிமதி சூடிய பரமனது பைஞ்சுடரே!
பாரெலாம் பழமது வேண்டிச் சுற்றியவா!
பாடற் கூடலை நாடிய புலவனே!
பாவ முனிசிறார் பவித்திரம் தந்தோனே!
வேதியன் தவறிட வெஞ்சிறை வீசியோனே!
வேடர் குலப்பிடி விரும்பி அலைந்தோனே!
வேலினால் வெவ்வரக்கர் வீழ்த்தி வென்றோனே!
வேண்டுவார் வேண்டுவரம் அருளும் வேலனே!
கோதில் குணத்தோர் குடிவாழ் கன்னிக்
கோமகனே!குமரா!வருக!வருகவே!
கோலத் திருமகள் ஞாலத் தலைமகள்
கோமகனே!குமரா!வருக!வருகவே.
பொருள்
முதலும்,முடிவும் ஆக விளங்கும் ஆறுமுகா!ஆதியான தந்தைக்கே ஆசானாய் விளங்கிய
அந்தணனே!ஆதிநாயகியாம் கல்யாணி அம்மையின் அருந்தவ வேலினால் அகிலம்
முழுவதும் வென்றவனே!ஆண்டிக் கோலம் கொண்டாலும் அழகனாய்க் காட்சி தரும் கந்தனே!
பிறைசூடிய பெம்மானின் அருட்சுடரே!பழத்திற்காக உலகையே வலம் வந்தவனே!
பாடலின் பொருளில் உயர்ந்தது நக்கீரன் உரையே ''என மொழிவதற்காக ''உருத்திர சன்மன்''
என்னும் புலவனாய் மதுரைச் சங்கம் வந்த புலவனே!பராசரரின் புதல்வர்களது பாவத்தைப்
போக்கி,அவர்களுக்கு அருள் பாலித்தவனே!
பிரணவப் பொருள் அறியாத நான்முகனைச் சிறையில் தள்ளியவனே!வேடர் குலத்தில்
தோன்றிய வள்ளியை விரும்பி,மலை காடெல்லாம் அலைந்தவனே!வேலாயுதத்தால்
அரக்கர் பலரை வீழ்த்தி வென்றவனே!தன்னை வணங்கிப் போற்றும் அடியவர்கள் விரும்பும்
வரம் அளிப்பவனே!
குற்றமற்ற குணத்தை உடைய மக்கள் வாழும் கன்னியாகுடிப் பேரரசே!குமரனே!
வருக;வருகவே.
அழகுத்தெய்வம் உலகத்தலைமகள் கல்யாணி அம்மையின் இளவரசே!குமரனே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக