முனியும் பணியும் புதல்வர் போற்றும்
முதலாம் படைநூல் முதுகீர் படைக்கும்
முறையே மணக்கும் மயிலாள் சிரிக்கும்
முதல்வன் முருகன் அமரும் குன்றே!
பணியாப் பகைவன் படுத்தும் கொடுமை
பரமா!தடுதடு! அடுஅடு! சுடுசுடு!
பணிந்தோர் விருப்பம் பதியாய்ப் புனைந்து,
பெருமான் அழித்த பெரும்போர்க் கடலே!
கனியால் தனியாம் புனித மலையே!
கனிவாய் அருட்சொல் குருவாம் நிலமே!
கனிசொல் குறத்திக் கரம்பிடித் தணிகையே!
கனிகாண் கருணை நிகராம் சோலையே!
அணியும் அணிக்கு அழகே!அறுபடை
அகத்தூர் குகனே!முத்தம் தருகவே!
பனிசூழ் மலையன் பிறைசூடு சடையன்
பவித்ரச் சுடரே!முத்தம் தருகவே.
பொருள்
பராசர முனிவர் போற்றினார்;அவரின் புதல்வர்கள் சாப விமோசனம் பெற்றனர்;பத்துப்
பாட்டின் முதல் பாட்டாய்த் திருமுருகாற்றுப் படையை நக்கீரர் பாடிப் போற்றினார்;
தெய்வயானை முருகனை மணந்த மகிழ்ச்சியோடு காட்சி அளிப்பாள்;இவைகளுக்குக்
காரண கர்த்தாவாகிய கந்தன் அமர்ந்துள்ள திருப்பரங்குன்றமே!
அரக்கர்களாம் சூரபன்மாதியர் படுத்தும் பாடு தாங்க முடியவில்லை;முருகனே!
போர் தொடுத்து அவன் செயலைத் தடுப்பாய் ;அழிப்பாய்;சுடரால் சுடுவாய்;என
வேண்டிய தேவர்களின் வேண்டுகோள் ஏற்று ,படைத் தளபதி ஆகி,அவர்களை
அடக்கி ஒடுக்கி அழித்த போர்க்களமான செந்தூர்க் கடலே!
கனி கிடைக்காததால் சினந்து தனியே ஆண்டியாய் நிற்கும் பழனி மலையே!
பிரணவப் பொருளைத் தந்தைக்கு அருளிய குரு வீற்றிருக்கும் நிலமே!
குறவள்ளியின் கரம் பிடித்த தணிகை மலையே!
பழங்களும்.அவைபோன்ற இனிய கருணையும் கொண்டோன் தங்கும் சோலையே!
அணிகின்ற அணி யெல்லாம் அழகு பெறும் அழகனே!அறுபடையை மனத்தே
போற்றும் கன்னியாகுடியில் வாழும் வேலனே!உனது கனிவாய் திறந்து,செவ்விதழ்
கூட்டி முத்தம் அருள்வாய்!
பனி சூழ்ந்த கைலை மலையில் வீற்றிருப்போன் பிறைநிலவை உடைய செஞ்சடையன்
நெற்றிக்கண்ணில் புனிதமாய்த் தோன்றிய முருகா!உனது கனிவாய் திறந்து,செவ்விதழ் கூட்டி
முத்தம் அருள்வாய்.
விளக்கம்
முனி...பராசரர்
புதல்வர் .....பராசரரின் புதல்வர்கள்
முதுகீர் ........தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவன் நக்கீரன்
மயிலாள் .....மயில் போன்ற தெய்வயானை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக