திங்கள், 21 டிசம்பர், 2015

வாரானைப்பருவம்--6

அதிரும் அரக்கர் அழிபோர்
         அமர்தேர் இந்திரன்
அடையுரு அணிமயில் அதன்மேல்
          அழகென அமர்ந்தோனே!
அடிபணி சூரனும்  அநித்திய
           அகம்விட் டடங்கி
அதிபதி வணங்கினேன் மயிலாய்;
           என்றதும் ஏற்றோனே!
அடங்கா அஜத்தின் தருக்கை
          அடக்கிய இளவல்
அதன்மீ தமர வேண்டிட
          அஜம்மீ தமர்ந்தோனே!
அலைகை கஜம்மேல் அமர்கன்னி
               ஆறுமுகா !வருகவே!
அலைகலை தொழுதிடும் மலைமகள்
                மைந்தனே!வருகவே.

                                      பொருள்
ஆரவாரம் மிக்க அரக்கரை அழிக்கப் போர்க் களம் காண,இந்திரன் மயில் உருக் கொண்டான் 'அத்தேராம்
மயில்மீது அமர்ந்து போர் புரிந்தோனே!
தோற்றோடிய சூரனும் கர்வம் விட்டு,மயிலாய் மாறிப் பணிந்தகாலை அதன்மீது அமர்ந்தோனே!
  தவறான வேள்வியில் தோன்றிய ஆட்டை அடக்கிய வீரவாகு அண்ணலே!தாங்களே இதனை
ஊர்தியாகக் கொண்டு உலகை வலம் வரவேண்டும்''என வேண்டுகோள் விடுக்க,அதை ஏற்று
ஆட்டின் மீது அமர்ந்தவனே!
ஒருபோது யானையையும் ஊர்தியாகக் கொண்டு விளங்கும் கன்னியாகுடி ஆறுமுகா!வருக;
அலைமகளும்,கலைமகளும் போற்றி வணங்கும் மலைமகளாம் கல்யாணி அம்மை
மைந்தனே!வருக.
                                விளக்கம்
அமர்தேர் இந்திரன் ....அரக்கரோடு போர் புரியுங்கால் முருகனின் ஊர்தியாம் மயிலாய்
இந்திரனும்,கொடிச்சேவலாய் அக்கினியும் இருந்தனர்.
அஜம் =ஆடு
அலைகை --அலைகின்ற இங்குமங்கும் ஆடுகின்ற துதிக்கை 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக