மனத்தில் நினைத்த மதுவார் குழலி
மலைநா டதனில் புனக்கா வலாளி
மகிழ்மண் மிதித்து மழை,தீ வெயிலில்
நடந்தே அடைந்த நலமார் காலும்,
சினத்தீ சிந்தனை செருவில் தொடரச்
சமரில் அரக்கர் குலங்கள் அழியச்
செருக்குத் தாரகன்,கஜமுகன் மடியச்
சூரனும் வணங்கப் பணித்த கரமும்,
குணத்தில் குறைந்தான் மறையை மறந்தான்
கொடுத்தாய் சிறையை;குனிந்தான் பிரமன்;
குணத்தான் பணிந்தே பொருளைக் கேட்டான்;
குருவாய் அமர்ந்தே பொருளளிச் செவ்வாயும்.
அணியாய் அழகாய் அமுதாய்ப் பெற்றவா!
அங்கன்னி அந்தண!முத்தம் தருகவே!
அணிபாம் பணிச்சடைக் கைலாச நாதர்
ஆன்ம மைந்தனே!முத்தம் தருகவே.
பொருள்
மனத்தகக் காதலி வள்ளிப் பிராட்டியார் வள்ளிமலையிலே தினைப்புனம் காவல் காக்கும்
செய்தி அறிந்து,அம்மையைத் தேடி,மண்,மலை,காடு,மேடெல்லாம் மழை,வெய்யில் பாராமல்
நடந்து சென்ற பாதங்களும்,
பண்பு மறந்த அரக்கர் குலத்தின் மீது ஏற்பட்ட சினம் போராய் மாறிடப் போர்க்களத்தில்
கர்வச்சாயை கொண்ட தாரகனையும்,யானை முகனையும் அழித்துச் சூரனும் சேவலாய்,
மயிலாய் மாறி வணங்கிடவும் வகை செய்த போர்த்திறன் குவித்த பன்னிரு கரங்களும்,
வணங்காத நான்முகனிடம் தொழில் கேட்டு,வேதப் பொருள் கேட்டு,விடை பகராமல் விழித்த அவனைச் சிறையிளிட்டும்,அதே பொருளை வணங்கிக் கேட்ட தந்தைக்கு உபதேசித்த
செவ்வாயும்.
அணியாய் வள்ளியையும்,அழகாய் வீரத்தையும்,அமுதாய் பிரணவப் பொருளையும்
கொண்ட முருகா!கன்னியாகுடியில் வாழும் அந்தணா!நின் திருவாய் குவித்து முத்தம்
தந்தருள்வாய்!
அணியாக நாகத்தை அணிந்த சடை உடைய கைலாச நாதரின் மனமுவந்த மகனே!
நின் திருவாய் குவித்து முத்தம் தந்தருள்வாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக