மருதமாம் வயநெல் வரப்பணி மஞ்சளே
மதகணை கருங்குவளை மணமுகத் தாமரை
நறுநிதிப் பயறுடன் உளுந்தது நலப்பயிர்
நகையெனின் நனிகுக இதழ்நிகர் ஆகா.
கரும்பினில் காய்ச்சிடும் பாகது ஒருபுறம்
கள்ளுடை மயக்கக் கலயமோ மறுபுறம்
கனிபலா குலைவாழை மாம்பழம் பலபுறம்
கனிமது மயக்கமே;குகனவன் குணமே.
தருநிழல் மரங்களும் தளிரிலைச் செடிகளும்
தவழ்கொடி வகைகளும் தருசுகம் மனமெலாம் .
தனிநிதித் தலைவனே தங்கிடும் பெருமையே;
தகரவன் தெவ்விதழ் ஈடாமோ?மருதமே.
பெருமையைப் பிறப்பிலே நிறுத்திய முருகனே!
பெருங்கன்னிப் பசுங்குழவி!முத்தம் தருகவே.
பெரியோனின் பேராசான் பதம்பெறு சுவாமியே!
பெருமையின் மறுசுடரே!முத்தம் தருகவே.
பொருள்
மருதநில முத்துக்களோடு ஒப்பிட்டு,உயர்ந்த முருக முத்தைப் பாராட்டும் அழகு.
மறுத்த வயல்கள் நெல் மணி முத்துக்கள்;வரப்பில் மஞ்சள் முத்துக்கள்;அணைக்கட்டில்
நீரெல்லாம் குவளை,தாமரை முத்துக்கள்;பயறும்,உளுந்தும் பசுமை முத்துக்கள்;இவை
யாவும் மருதநில அழகு கூட்டும் முத்துக்களே.ஆயினும் இவை யாவும் செந்திலோன்
செவ்விதழ் சிந்தும் முத்தத்திற்கு இணை ஆகா.
கரும்பைக் காய்ச்சிப் பாகு எடுப்போர் ,கள்ளுக் கலயம் தாங்கிய மரத்திலிருந்து கள்
எடுப்போர் சூழ்ந்துள்ள மருதத்தில் பலா,வாழை,மாம்பழம் போன்ற கனி வகைகளின்
விளைச்சல் நிறைந்து இனிப்பெனும் சுவை முத்தை அளிக்கின்றது.அவைகள் மயக்கமேம்பாடு உடையதே.குகனின் முத்தமோ குணம் காட்டி அருளும்.
நிழல் தரும் மரங்களும்,தளிர்க்கும் செடிகளும்,கொடி வகைகளும்,மனமெல்லாம்
சுக அனுபவம் நல்கும்.நிதித் தலைவனாம் குபேரனே விரும்பிடும் இடம் மருதமே.
ஆயினும் ஆட்டு ஊர்தி கொண்ட ஆறுமுகனின் ஆரமுது ஊறும் செவ்விதழ்ச் சுவைக்கு
ஒருபோதும் ஈடாகாது மருதமே.
பிறப்பிலேயே பெருமை குவித்த குகனே!பேரூராம் கன்னியாகுடியின் அருமைக்
குழந்தையே!முத்தம் அருள்வாய்.
பரம்பொருளான ஈசனின் ஆசானே!பெருமைக்கெல்லாம் பெயராய் விளங்கும் சுடரொளியே!
முத்தம் அருள்வாய்.
பொருள்
தகர்==ஆடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக