மலைசூடும் மயக்கமாம் மதனின் மனங்கவர்
மண்பிறவா மலர்நீயே;
மலைக்கவைக்கும் மயக்கம்தீர் மாவுயிர்கள் மனம்நிறைந்து
மதிக்கின்ற மலரவனே.
கலைசூடிக் காலத்தால் கரைந்தும் வளர்ந்தும்
கறைகொண்ட கதம்பம்நீ.
கலையவனே;காலத்தால் கரை,வளர் காட்சியில்லாக்
கறைக்கண்டன் கனலவன்.
தலையமர் தண்சிறப்பைத் தலைவனின் தயவினால்
தனதாக்கிக் கொண்டவன்நீ.
தலைகுனிந்து,தோள்சுமந்து தத்துவத்தைத் தானறிந்த
தலைவனின் ஆசானே.
அலையாற்றுக் கரைகன்னி அங்குழவி முருகனுடன்
அம்புலி!ஆடவாவே!
அலைகங்கைத் தலைக்கொண்டோன் அருமைந்தன் முருகனுடன்
அம்புலி !ஆடவாவே.
பொருள்
வானில் உள்ள முழுநிலவைக் குழந்தையுடன் விளையாட வருமாறு தாய்,செவிலித்தாய்
போன்றோர் அழைப்பது;குழந்தை பிறந்து,பதினைந்தாம் திங்களில் நிகழ்வது.
மலையின் தலையில் விளங்கும் நீ மன்மதனின் தோழன்;மயக்கமனம் கொண்டவன்;மண்ணில்
தோன்றாத மலராய் மலையின் தலையில் உள்ளாய் ;
மயக்கத்தினால் மருண்டு மலைக்கும் உலக உயிர்கள் மனத்தில் நிறைந்து விளங்கி.அருள்புரியும்
மாமலராய் விளங்குபவன் முருகன் .
பதினாறு கலைகளைக் கொண்ட நீ தேய்கிறாய்;வளர்கிறாய்;கறையை உடைய நீ உயர்வும்
தாழ்வும் கலந்த கதம்பம்.
கலைகள் எல்லாம் அவனே;காலத்தால் அழிவதும் இல்லை;வளர்வதும் இல்லை ;நீலகண்டனின்
சுடர் அவன்.
சிவபெருமானின் அருளினால் அவர் தலையை அலங்கரிக்கும் பேற்றினைப் பெற்றவன் நீ;
தலைவணங்கி,தோளிலே சுமந்து,பிரணவப் பொருளைக் கற்ற சிவனுக்கு முருகன் ஆசான் ஆவான்.
அலைகள் நிறைந்த ஆற்றுக்கரையில் அமைந்த கன்னியாகுடி அழகிய குழந்தை முருகனுடன்
நிலவே!நீ விளையாட வருவாய்!
கங்கையாற்றைத் தலையிலே கொண்ட சிவனின் அருமகன் முருகனுடன் நிலவே!நீ விளையாட
வருவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக