ஏழெனும் இசையாகி,எட்டெனும் திசையாகி,
இளசெனும் எழிலாகி,
ஏங்கிடும் மையலர் ஏகமதிக் காதலாகி,
இலங்கிடும் கலைக்குகா!
பாழெனும் ஆசையால் பரிதவி மனத்தால்
பண்பிழந்த செயலால்
பாவம்புரி தீயரக்கச் சூரனுக்கும் புண்ணியப்
பாதையருள் பிரபுவே!
யாழெனும் குழலெனும் இரண்டிசை இருமருங்கில்
யாகம்போல் காத்துநிற்க,
யாத்தநூல் தோத்திரப் போற்றலில் மகிழும்,
யஜுர்வேத உருகுருவே!
தாழிலாத் தலைவாசல் தத்துவச் சண்முகா!
தாலோ!தாலேலோ!
தாள்வணங்கும் கன்னி நகர் தனில்வாழ் கற்பகமே!
தாலோ!தாலேலோ!
பொருள்
ஏழிசையானவன்;எண்திசை ஆள்பவன்;இளமையின் செம்மல்;காதல் கொண்ட
பெண்களின் ஒரே நினைவாய் ஏங்க வைப்பவன்;என்றெல்லாம் போற்றப்படும்
குகனே!
துயரைத் தரும் ஆசை மேவியதால் ,பரிதவிக்கும் மனத்துடன்,பண்பிழந்து,
வேதநெறி மறந்து,அமரரையும்,மற்றவர்களையும் கொடுமைப் படுத்திப் பாவ
வினைபுரிந்த சூரபன்மனுக்கும் நல்வழிகாட்டி ஏற்று அருள் புரிந்த பிரபுவே!
யாழ்போல் தெய்வயானை,குழல்போல் வள்ளி என இருமருங்கிலும் வேள்விபோல்
காத்துநிற்கும் தேவியர் சூழவும்,முருகனைக் குறித்துப் பல சான்றோர் இயற்றிய
தோத்திரப் பாமாலைகள் போற்றவும்,மகிழ்ந்து விளங்கும்,நான்குவேதங்களின் ஒன்றான
யஜுர் வேதத்தின் உருவாய் அமைந்த குருவே!
எப்பொழுதும்,எல்லோரும் வருவதற்கு ஏற்பத் தாழ்ப்பாள் போடாத தலைவாயில்
கொண்ட,தத்துவச் சண்முகா!தாலோ!தாலேலோ!
மலரடி வணங்கும் கன்னியாகுடியில் வாழ்கின்ற கற்பகமே!தாலோ!தாலேலோ!
விளக்கம்
இளசெனும் ===இளமை என்பதன் வழக்காற்றுச்சொல் இளசு
ஏகமதி==ஒரே சிந்தனை ஒரே நோக்கு
யாகம்போல் ===தீயவை அணுக விடாத தீ' எனும் சக்திகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக