அள்ளாத கொள்ளாத இல்லாத ஞானம்;
அகலாத தளராத குறையாத காமம்;
அயராத வணங்காத மறையாத கர்வம்
அணுகாதஅரற்றாத நிலையருளும் ஆறுமுகா!
தள்ளாத தவிக்காத தகிக்காத முகமும்,
தயங்காத கலங்காத அஞ்சாத மார்பும்,
தாவாத மேவாத போகாத கருணையும்,
தட்டாத விள்ளாத பேரருளும் கொண்டவனே!
உள்ளாத உந்தாத உதவாத நெஞ்சத்தில்
உன்னாத உலராத உயர்த்தாத கருத்துற்று,
உசுப்பாத எழுப்பாத உயிரிலாத செயலினால்
உலவாத பிணமாதல் நீக்கிடும் நிர்மலனே!
கொள்ளாத போற்றாத மாற்றாத மனவரக்கர்
கொத்தாக அழித்தவனே!தாலோ!தாலேலோ!
கொல்லாத நோன்புற்றோர் கொண்டதோர் கன்னிநகர்
கொண்டுபோற்றும் கற்பகமே!தாலோ!தாலேலோ!
பொருள்
யாராலும் அல்லபடவில்லை;கொள்ளப்படவில்லை;ஞானம் இல்லவே இல்லை;
அகலாது;தளராது;குறையாது விளங்கும் காமம்;அயர்வடையாது;வணக்கம் இருக்காது;
மறையாது விளங்கும் கர்வம்;ஆகியவை அணுகாமலும்,அடக்கி அழாமலும்
தடுத்தாட்கொள்ளும் பேரருள் கொண்டவனே!
வேண்டாம்''எனத் தள்ளாமலும்,தவிக்கவிடாமலும்,காண்பதற்கு சாந்தம் கொண்டும்
விளங்கும் முகமும்,போரிடத் தயங்காமலும்,கலந்காமலும்,அஞ்சாமலும் விளங்கும்
தடமார்பும்,ஒருபக்கம் தாவாமலும்,வேண்டியோர்,வேண்டாதோர் எனப் பாவிக்கமலும்,
மறைந்துவிட்டது''இனி வராது என நினைக்க இடம் கொடுக்காமலும் விளங்கும் கருணையும்,
இல்லை''என்னாது வழங்கியும் குறைக்காமல் வழங்கியும் சிறக்கும் பேரருளும் கொண்டவனே!
நல்லதைநினையாத,நன்மைக்கு எழுச்சி பெறாத நல்லோர்க்கு உதவாத நெஞ்சத்தில்
உயர்வில்லாத,ஈரமற்ற எண்ணங்களை எண்ணுகின்ற கருத்தோடு,தட்டிஎழுப்பாத,
உயிரற்ற செயல்களைப் புரிந்து,நடக்காத பிணம்போல் கிடப்பாரை மாற்றி ஆட்கொள்பவனே!
இறைவன் என மனத்தில் கொள்ளதவராயும்,போற்றாதவராயும்,தீய நோக்கங்களை
மாற்றாதவராயும் விளங்கிய அரக்கர் கூட்டத்தை அழித்தவனே!தாலோ!தாலேலோ!
உயிர்களைக் கொல்லா விரதம் கொண்டு வாழ்க்கை நடத்தும் சான்றோர் வாழும்
கன்னியாகுடி மக்கள் போற்றும் கற்பகமே!தாலோ!தாலேலோ!
விளக்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக