அஞ்சொலிள மஞ்ஞை அன்ன நடைபயில்
அல்லிக் குளிர்கர வள்ளியின் அரவணைப்பே!
அம்புலி முகமும் அமுத மொழியும்
அயன்படை அழகாம் தேவாள் அங்கணவ!
அஞ்செழுத்து அய்யன் ஆற்றல் புதல்வ!
அன்னை அணைப்பில் ஒன்றான ஆறுமுக!
அலைநீர்க் கங்கையின் அருமந்த புத்திர!
அக்கினி வாயு அங்கரத் தழற்சுடரே!
அஞ்சியோர் காக்கும் ஆனைமுக இளவலே!
அருமறை உணரா அந்தணன் பதியே!
அகத்திய முனிக்கு அருள்புரி ஆசானே!
அருண கிரிமொழி வழியருள் அணையே!
கஞ்சமலர் விரிந்த கழனிக் கன்னியின்
கருணைச் சண்முக!கொட்டுக சப்பாணி!
கஞ்சுகச் சட்டநாதர் கருப்பறிய லூரருகு
கன்னிநகர்ச் சண்முகா!கொட்டுக!சப்பாணி!
பொருள்
மென்மையான சொல்லும்,இளமயில்போல் அழகும்,அன்னம்போல் நடையும்,அல்லிமலர்பொல்
குளிர்ந்த கைகளும் கொண்ட வள்ளியின் அரவணைப்பில் மகிழ்பவனே!நிலவுபோன்ற முகமும்,
அமுதூறும் மொழியும்,பிரமன் படைத்த அழகில் எல்லாம் உயர்ந்து விளங்கும் அழகும் கொண்ட
தெய்வயானையின் அழகிய கணவா!
சிவபிரானின் ஆற்றலால் தோன்றிய புதல்வனே!சரவணத்தில் வந்து கண்டு,உச்சி முகர்ந்து
அன்பால் அணைத்த போது ஆறு உருவங்களும் ஒன்றான ஆறுமுகனே!கங்கையாற்றின்
கரம் வளர் மகனே!அக்னி,வாயு சுமந்த தழற் சுடரே!
அஞ்சுவோர் காக்கும் கணபதியின் தம்பியே!ஓங்காரப் பொருள் உணரா நான்முகனைத்
தண்டித்த தலைவா!அகத்திய முனிவனுக்கு அருள் புரிந்த ஆசானே!அருணகிரியைத்
தடுத்தாட்கொண்டு ,மொழிவளம் சிறக்க வழி காட்டிய அணையே!
தாமரை மலர்கள் விரிந்து விளங்கும் கழனிகள் சூழ்ந்த கன்னியாகுடியில் கருணையுடன்
காட்சி தரும் சண்முகா 1உன் இருகரம் ஒலிக்கும் ஒலி எழுப்பி அருள்வாய்!
சட்டை அணிந்து விளங்கும் சட்டநாதர் அருள்பொழியும் கருப்பறியலூர் எனப்படும்
தலை ஞாயிறு எனும் ஊர் அருகே உள்ள கன்னியாகுடிச் சண்முகா!உன் இரு கை கொட்டி ஒலி
எழுப்பி அருள்வாய்!
விளக்கம்
வழி அருள் அணையே 1---அருணகிரியைத் தடுத்தாட்கொண்ட முருகன்;வழிந்தோடும் நிரைத்
தடுத்துப் பயனுடையதாகச் செய்யும் அணைபோல முருகனும் அருணகிரியை நல்வழிப்
படுத்தினார்.
கருப்பறியலூர் ....தலைஞாயிறு என்னும் ஊரில் அமைந்துள்ள சட்டநாதப் பெருமான்;சட்டை
அணிந்த சிவன் ;அவ்வூருக்கு அருகில் அமைந்த ஊர் கன்னியாகுடி
கஞ்சுக சட்ட நாதர் ...ஒருபொருட் பன்மொழி (கஞ்சுகம்,சட்டை )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக