பசும்வயல் பைஞ்சேறு பரிதி ஒளிவாங்கிப்
பயிர்கள்,அலவன்,மீதே பரப்பப்
புல்லாங் குழலிசைக் காற்றிடை பரவப்
பச்சை மணியொளி மருதத் தலைவா!
விசுதொடும் சிகர விரிநிலா நிசியில்
விளக்கென மின்னும் வேங்கை இலைகள்
வியன்மான் இணையுடன் விரும்பின்பம் துய்க்கும்
வீழருவித் தாழ்சுனை குறிஞ்சிக் கிழவா!
பசுவொடு காளை பழகும் மாலை;
பலபுள்ளி நறுந்தோகை விரிக்கும் மயிலே;
பேரிடி கூட்டிப் பெய்திடும் மேகம்;
பல்லிதழ்ச் செங்காந்தள்முல்லை அரும்பே!
வசுக்கள்,திக்பாலர் கந்தர்வர் போற்றும்
வேலவா!சப்பாணி கொட்டி அருளே!
பசு,பதி பாசம் போற்றும் கன்னிப்
பரம!சப்பாணி கொட்டி அருளே!
பொருள்
பசுமையான வயலின் சேறு சூரிய ஒளியை வாங்கி,பயிர்,நண்டு ஆகியவற்றின் மீது பரப்புகிறது;
காற்றின் வேக ஒலி புல்லாங்குழல் போல் இசைக்கிறது;ஒளியும்,ஒலியும் பசுமையைப்
பறைசாற்றும் மருதநிலத் தலைவா!
வானைத்தொடும் சிகரங்களைப் பெற்ற மலைகளில் நிலவொளி சூழ்ந்த இரவு நேரம்;
விளக்கு போல் வேங்கை மர இலைகள் மின்னுகின்றன;தனது இணையுடன் விரும்பி
இன்பம் துய்க்கும் ஆண்மான்;அருவி,சுனைகள் கொணட குறிஞ்சிக் கிழவா!
பசுவும்,காளையும் கூடிப்புணரும் மாலை நேரம்;பல புள்ளிகளை உடைய தனது
தோகையை விரிக்கும் மயில்;இடிஇடித்து மழையைப் பொழியும் மேகக் கூட்டம்;
பல இதழ்களைக் கொண்ட செங்காந்தள் மலரும் முல்லை நிலத்தின் அரும்பாய்
விளங்கும் கந்தா!
எட்டு வசுக்கள்,எட்டு திக்பாலர்கள்,கந்தர்வர் போற்றிப் புகழும் வேலவா!உன் இரு கை
கொட்டி,ஒலி எழுப்பி அருள்வாய்!
பத்தி,பசு,பாசம் என விளங்கும் சைவ சித்தாந்தம் போற்றும் கன்னியாகுடியில் பரமசிவமென
விளங்கும் கந்தா!உன் இரு கை கொட்டி ஒலி எழுப்பி அருள்வாய்!
விளக்கம்
அலவன்==நண்டு
விசுதொடும் .....விசு==வானம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக