கண்ணது காமமோ!கஞ்சமுகம் காதலோ!
கவினிதழ் சொர்க்கமோ!கச்சை இன்பமோ!
கசடெலாம் கண்டுநான் காலம் கழித்தநாள்
காலால் தடுத்த கடவுளே!கந்தா!
மண்ணது என்னது மமதை மிளிர
மற்றோர் மதியா புற்றுரை பாம்பாய்
மன்னன் போலவே மனநிலை கொண்டேனை
மலரடி தீக்ஷையால் மாற்றிய முருகா!
பொன்மலைப் பொக்கிஷம் பொன்னணிக் குவியல்
பொற்றவிசு பொன் பொன் என்னவே பறந்து
புன்மனப் பேராசைப் புலைகுழியில் கிடந்தேனைப்
பொன்னடித் தீண்டலால் புதுப்பித்த புண்ணியா!
கண்ணாய்,மண்ணாய்ப் பொன்னாய் விளங்கும்
கண்மணிக் குமரா!தாலோ!தாலேலோ!
கண்செய் புண்ணியம் கன்னியில் நின்று
காட்சிதரும் கற்பகமே!தாலோ!தாலேலோ!
பொருள்
காம உணர்வு வழங்கும் கண்,காதல்கொண்ட தாமரை முகம்,மென்மை சொர்க்கம் காட்டும் இதழ்,
இன்பத்தைப் பறைசாற்றும் மார்பகம்,எனக் கசடுகளை எல்லாம் இன்பம் எனக்கருதிக் காலம்
கழித்த என்னை உனது காலால் தடுத்து ஆட்கொண்ட கந்தனே!
இந்த நிலவுலகம் என்னுடையது;என்ற மமதையால் மற்றவர்களை மதியாமல்,புற்றில்
தங்கும் பாம்பு போலச் சீறியும்,விரட்டியும்,மன்னன் போன்ற மனமது கொண்டு அடாது புரிந்த
என்னை,உனது மலர் போன்ற திருவடி தீக்ஷை அளித்து மாற்றி,உன்னடிமை ஆக்கிய முருகா!
பொன்மலை,பொன்பொக்கிஷம்,பொன் ஆபரணங்கள்,பொன் இருக்கை,எனப் பொன் பொன்
என ஆசை மேலிடப் பறந்து பேராசைப் பிணமாய் வாழ்ந்த என்னை,உனது பொற்பாதத் தீண்டலால்
ஆசை நீக்கி,அன்புடை அடியவனாய் ஆக்கிய ஆறுமுகா!
கண்ணும் நீ;மண்ணும் நீ;பொன்னும் நீ;;கண்மணியே!குமரா!தாலோ!தாலேலோ!
வாழ்வோர்களின் கண் செய்த புண்ணியத்தால் கன்னியாகுடிக்கு எழுந்தருளிக் காட்சி தரும்
கற்பகமே!தாலோ!தாலேலோ!
விளக்கம்
கஞ்சமுகம் ===உவமைத்தொகை
கச்சை ---ஆகுபெயராய் மார்பகத்தைக் குறித்தது.
தீக்ஷை ==ஸ்பர்சம் அதாவது தொடுதல் அதன் வழியே ஞானம் அளித்தல் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக