வெற்றிக் கனியிது வீரச் சுவையிது
விரிவான் உலகை விரைந்து சுற்றும்
வேலன் கணபதி விரும்பிப் பெறலாம்
விந்தை ஏற்று விரைந்த வேலா!
சுற்றேன் உலகம்;சுற்றுவேன் பெற்றோர்;
சக்தியும் சிவனுமே மூவேழ் உலகம்
கற்றோர் ஏற்றிடக் கனியும் கணபதிக்கு.
கபடம் என்றே தனித்த ஆண்டியே!
பற்றிலா அவ்வைப் பாட்டி முன்னர்
பழமிது சுடும்,சுடாப் பழமது வேண்டுமோ!
பாட்டியோ பழமண் அகல ஊதிடப்
பழம்சூடோ?வினவி நகைத்த வேடா!
சொற்றுணை வேதியா!சுந்தரக் கன்னிநகர்ச்
சண்முகா!சப்பாணி கொட்டி அருளே!
நற்றவச் சீலர்கள் நாடும் கன்னி நகரச்
சண்முகா!சப்பாணி கொட்டி அருளே!
பொருள்
ஒருசமயம் தனக்குக் கிடைத்த அரிய மாங்கனியை உலகை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ
அவருக்கே அளிப்பேன்;;எனத் தந்தை சொல்ல வேலனும்,கணபதியும் அதைக்கேட்டனர் .,முதலில் உலகைச் சுற்றிவரப் புறப்பட்ட வேலனே!
உலகமும் சிவசக்தியும் ஒன்றல்லவா!ஆகவே அவர்களையே சுற்றி வருவேன்;அதுவே உலகைச் சுற்றிய தாகும்''எனக் கணபதி அரிய பழத்தைப் பெற,அதுகண்டு,இது ஏற்க இயலாதது,என்று
தனியே ஆண்டிக் கோலத்தில் அமர்ந்த முருகா!
பற்றற்ற அவ்வை;தமிழ்ப்பாட்டி;அவள்முன் மரத்தில் அதுவும் நாவல் மரத்தில் அமர்ந்து,
வேடன் உருவில் காட்சி கொடுத்தார் முருகன்.காட்டு வழியில் நடந்த கிழவி,முருகனைக்
கவனிக்கவில்லை;வேடனோ பாட்டி! நாவல் பழம் சாப்பிடறீங்களா?எனக் கேட்க ,சரிப்பா!
போடு,என்றாள் பாட்டி.வேலன் சுட்ட பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா எனக்கேட்க,
நாவல் மரத்தில் சுட்ட,சுடாத பழங்களெல்லாம் காய்க்கின்றனவா!எனக்குச் சுடாத பழமே
போடு''என்றாள்.வேலன் மரத்தை உலுக்கினார்;பழங்கள் கீழே விழுந்தன;விழுந்த பழத்தை
எடுத்த பாட்டி,அதில் ஒட்டியிருந்த மண் அகலும்படி வாயால் ஊதினாள் .மரத்திலிருந்த
வேடன் சிரித்தபடி பாட்டி!பழம் சுடுகிறதா?இப்படி ஊதுகிறீர்களே ''என்றான்;அதன்பின்தான்
முருகன் வேடனாய்க் காட்சி அளித்தது அவ்வைக்குத் தெரிந்தது.அப்படி வினவிய வேலா!
சொல்லின் துணையாம் மறையாளனே!அழகுமிகுந்த கன்னியாகுடியில் வீற்றிருக்கும்
சண்முகா!உன் இரு கை கொட்டி,ஒலி எழுப்பி அருள்வாய்!
நற்றவம் புரிந்து உயர்ந்த நல்லொழுக்கமிககவர்கள் வாழும் கன்னி நகர்ச் சண்முகா
உன் இரு கை கொட்டி ஒலி எழுப்பி அருள்வாய்.
விளக்கம்
விந்தை....விந்தையான போட்டி
கபடம்....பொய்யானது,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக