நாரை வரிசை நீல வானிலே,
நால்வகைக் கொக்குகள் நன்செய் நடுவிலே
நாகண வாய்ப்புள் நாவல் மரத்திலே
நத்தை கொத்தி நடக்கும் வரப்பிலே
தோரண மணியொலி திமில்திமிர் காளை
தோற்கும் வாரண வடிவுடை வாளை
தோயும் தென்னங் கள்ளின் பாளை
தோல்பறை முழவு முழங்கிடும் வேளை
பாரறி சான்றோர் பயனுறு சாலை
பயின்றிடு பாலர் படித்திடு காலை
தாரணி மார்பர் தரிப்பரே கோலை
தண்வழி உழவர் மருதச் சோலை.
கார்முகில் மயிலும்,கனங்குழைச் சேவலும்
காலடி போற்றும் கந்தா!தாலேலோ!
கார்நெல் அறுத்துக் களத்தினில் திகழும்
கன்னிநகர்க் கற்பகமே!தாலோ!தாலேலோ!
பொருள்
நாரை என்னும் பறவை வானத்தே பறக்கும்;மடையான்,சுள்ளான் போன்ற கொக்குகள்
வயல் நடுவே நடக்கும்;நாகணவாய்ப் பறவை நாவல் மரத்தில் கூடு கட்டும்;நத்தை கொத்தி
என்னும் ஒருவகைக் கொக்கு வரப்பில் நத்தையைத்தேடி நடை பயிலும்.
கழுத்துமணி தோரணம்போல் ஆடி அசைந்து ஒலி எழுப்பும் காளைகள்;உருவத்தில் யானையை
ஒத்த மிகப் பெரிய வாழை மீன்கள் ;தென்னைமரத்தில் கட்டப்பட்ட கல் இறக்கும் பானைகளில்
தென்னம் பாளை கள்ளை சொட்டு சொட்டாய் விடும்;தோலால் ஆக்கப் பட்ட பறை,முழவு
போன்றவை அடித்து ஒலி எழுப்பும் மாலை வேளை .
உலகறிந்த சான்றோர்கள் வாழ்கின்ற தெருக்கள்;குழந்தைகள் காலையில் பாடங்களைப்
படிப்பார்;நீதி என்னும் மலர்மாலை அணிந்த மன்னர் செங்கோல் ஏந்தி ஆட்சி நடத்துவர்;கருணை
கொண்ட உழவர்கள் நிறைந்திருப்பர்;இப்படி விளங்கும் மருத நிலம்.
அங்கு,குடிகொண்ட முருகா!மயிலும்,சேவலும் போற்றிநிற்கும் கந்தா!தாலேலோ!
கார்கால நெல்லை அறுத்து,அதனைக் களத்து மேட்டிலே பரப்பி,மருதநில மாண்பாய்த்
திகழும் கன்னியாகுடியின் கற்பகமே!தாலோ!தாலேலோ.
விளக்கம்
முதற்சீர் போலவே இறுதிச் சீரும் ஒத்துவரப் பாடுவது ஆங்கிலக் கவிதை மரபு;தமிழிலும்
சிலர் அப்படிப் பாடியுள்ளனர்;இப்பாடல் அப்படி அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக