அற்றது இற்றென மற்றது பற்றறு
அக்களம் புக்குடைப் தெக்கணச் சக்கரம்
கற்றது உற்றுடை செற்றிடும் பெற்றபோர்
கற்றிலர் தோற்றிட வெற்றிபெறு வீரனே!
மற்போர் மதகரி;மற்றை மிதிகரி
மகுடச் சரிவுடை நகுநிலை அரக்கர்
விற்போர் தொட்டு வெற்றுடல் எட்டிட
வெறிவேல் வென்றிக் களமுடைக் குமரா!
சொற்போர் தோற்ற சொற்பதி ஒருபுறம்;
சுற்றாச் சுற்றம் தோற்றோன் ஒருபுறம்
சுற்றிடும் சுந்தரன் தோற்றது ஒருபுறம்;
சுட்டெரி செவ்வேல் கரமுறு கந்தா!
கற்போர் போற்றும் கன்னிக் கற்பகமே!
கந்தனே!சப்பாணி கொட்டி அருளே!
பொற்போர் புரிந்து புதுப்போர் ஆக்கிய
பொன்னரசே!சப்பாணி கொட்டி அருளே!
பொருள்
அம்பு இரிந்தது;வாள் முறிந்தது'கை ஒடிந்தது;என்ற கூக்குரல் அந்தப் போர்க்களம் முழுவதும்
ஒலித்தது; யமனின் பாசக் கயிற்றுச் சக்கரம் பல்லோர் உயிரைப் பறித்தது;கற்ற வீரப் பாடங்கள்
உதவவில்லை;அரக்கர் கூட்டம் கற்றும் பயனின்றித் தோற்றனர்;வெற்றி பெற்ற வீரனே!முருகனே!
யானைபோன்றோர் மற்போர் புரிந்தனர்;மதயானையாய் விளங்கும் பூதர்களின் காலில்
மிதிபட்டு அரக்கர் கூட்டம் மாய்ந்தது;மகுடங்களை இழந்த அரக்கர் தலைவர்கள் நாணினர்;விற்போர்
தொடங்கிய அரக்கர் விலையும் இழந்து உயிரையும் இழந்தனர்;வெற்றிவேல் வெற்றி கண்ட
காலத்தின் தலைவனே!கந்தா!
சொற்போரிலே தோற்றோடினார் சொல்லாம் கலைமகளின் கணவர்;சுற்றமும் தானும் தோற்றோடி
இளைத்தான் சூரன்;உன்னையே சுற்றிவரும் இந்திரன் கூட உன்னிடம் தோற்றவன் தானே!
சுட்டெரிக்கும் சுடராம் செவ்வேல் கொண்ட வேலனே!
கற்ற சான்றோர் போற்றும் கன்னியாகுடியில் கற்பகமாய் விளங்கும் கந்தனே!உன் இரு
கை கொட்டி ஒலி எழுப்பி அருள்வாய்!
போற்றத் தகுந்த போர் புரிந்து,''இது ஒரு புதுப் போர்''என்றாக்கிய பொன் முருகா!உன்
இரு கரம் கொட்டி ஒலி எழுப்பி அருள்வாய்!
விளக்கம்
தெக்கணச்சக்கரம் ......தெற்குத் திக்கின் தலைவன் யமனின் ஆணைச்சக்கரம் .
சுற்றிடும் சுந்தரன் ==இந்திரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக