சகல புவன கிரிரா ஜகுமாரி
சனக முனிவர குருமுக ஈசன்
சத்குண பூயிஷ்ட சித்தி கஜமுகன்
சத்யப் ரஸாத சண்முக தேவே!
நிகல நிர்மல நித்ய கல்யாணர்
நியதி நிமந்த்ரோத் பத்திச் சதுர்முகன்,
நித்ய போக நேத்ர ஸஹஸ்ரன்
நிதம்நிதம் துதிக்கும் நிமலனே!குமரனே!
அகல ஜலநிதி சரவணப் பொய்கையும்,
அக்னி வாயு கங்கா சமிதியும்,
அனுதினம் அருமுலை அமுதளி கிருத்திகையும்
அந்தம் ஆதியென வளர்த்த ஆறுமுகா!
அசல கர்வம் அடக்கிய அகத்திய
ஆசானே!சப்பாணி கொட்டி அருளே!
அறுபடை வீடாய் அமைந்த கன்னி நகர்
அகலானே!சப்பாணி கொட்டி அருளே.
பொருள்
எல்லா உலகங்களுக்கும்,மலைகளுக்கும்,அரசியாக விளங்கும் கல்யாணி அம்மை,
சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவரர்களுக்கு அமைதியை
உபதேசித்த குரு சிவபெருமான்,நற்குணங்களும்,நன்மைபயக்கும் அருளும் கொண்டு விளங்கும்
விநாயகர்,ஆகியோரின் உண்மை அருள் உருவாய் விளங்கும் முருகக் கடவுளே!
காக்கும்மனமும் தூய்மை மனமும் கொண்டு விளங்கும் சர்வமங்கள காரணான திருமாலும்.
விதிப்படிப் படைப்புத் தொழிலாற்றும் நான்முகனும்,இன்ப நுகர்வை அழியாத் தன்மையாய் அனுபவித்து,
அதனால் உடலெல்லாம் ஆயிரம் கண்களைப் பெற்ற இந்திரனும்,போற்றித் துதிக்கும்
குமரனே!
உலகெங்கும் சூழ்ந்துள்ள தண்ணீர் நிறைந்துள்ள சிவணப் பொய்கையும்,சிவனது நெற்றிக்கண்
பொறியைத் தாங்கிச் சென்ற அக்னி,வாயுவும்,அதனை ஏற்ற கங்கையும் ,நாள்தோறும் தாய்ப்பால்
அளித்து வளர்த்த கார்த்திகைப் பெண்களும்,முதலும் முடிவும் ஆன உன்னை வளர்த்தனர்;அப்படி
வளர்ந்த ஆறுமுகனே!
விந்திய மலையின் கர்வம் அடக்கி, குட்டி அதனைப் பாதாள உலகிற்கு அனுப்பிய அகத்திய
முனிவனின் ஆசானே! உனது கைகளைக் கொட்டி ஆரவாரிப்பாயாக.
அறுபடைவீடாய் அமைந்த கன்னியாகுடியை விட்டு அகலாத ஆறுமுகனே! உன் கைகளைக்
கொட்டி ஆரவாரம் செய்தருள்க.
விளக்கம்
தற்சமம் என்னும் அமைப்பில் வடமொழிச் சொற்களால் இப்பாடல் அமைந்துள்ளது.
பூயிஷ்ட --நிறைந்த
நிமந்த்ரோத்பத்தி ----நிமந்த்ர +உத்பத்தி மறை மந்த்ரங்கள் அடிப்படையில் அமைந்த
படைப்புத் தொழில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக