அகிற்புகை நறுமணக் குழற்கரு மடந்தையர்
அணைமுலை அருஞ்சுவை அமுதுணு குழந்தையே!
துகின்மடத் துடியிடைத் துவள்நடைக் குறமகள்
தளிர்ப்பதம் துணையெனத் தினைப்புனம் அலைந்தவா!
முகில்தொடு முழுநிலா முகமதில் முறுவலி
மகிழ்சிரிப் பினையுடை மகபதி மகளவள்
மனங்குளிர் திருமண நலக்களை குவிந்தநாள்
மலரணி நறுஞ்செயல் புரிந்ததால் உயர்ந்தவா!
இகபரம் சுகம்தவிர் இனியன அகற்றியே
இறையவன் இருவடி இராப்பகல் இறுத்தியே
அகமெலாம் அறுமுக நினைவுடன் புலம்பியே
அடிதொழும் அடியவர் அருகமர் குணத்தவா!
திகம்பரன் திரிபுரை தரிசனப் பவித்திரம்
திகழ்நகர முருகனே!கொட்டுக சப்பாணி
திரள்வயல் விளைச்சலில் சிவப்பணி புரிமனத்
திருக்கனி நகர்க்குகா!கொட்டுக சப்பாணி!
பொருள்
அகிற்புகையூட்டிய கருங்கூந்தல் கொண்ட கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில்,
அமுது உண்ணலில் வளர்ந்த குழந்தையே!துயிலுடுத்தி மடமை பொங்கத் துடியிடையும்,துவள்
நடையும்,கொண்ட வள்ளியின் மென்மையான பாதங்களே துணை எனக்கொண்டு,தினைப்புனம்
சுற்றிச்சுற்றி வந்த சுந்தரனே!
முழுமதி போன்ற முகமதில் முறுவலாய் வரும் மகிழ்வில் திளைக்கும் இந்திரன் மகளாம்
தெய்வயானை மனம் மகிழுமாறு மணநாள் கண்டும்,அவளுக்கு மாலை அணிவித்தும் உயர்ந்த
மணவாளா!
இல்லறச்சுகம் தவிர்த்தும்,இனிக்கும் இன்பங்கள் வெறுத்தும்,இறைவனாம் முருகனை
நினைந்தே அவனடி புகழ்ந்தே இரவுபகல் கழித்தும்,மனமெல்லாம் ஆறுமுகக் கடவுளைப் போற்றி நினைத்தும் முருகா!முருகா!எனப்புலம்பியும்,பாதங்களைப் பற்றித் தொழும் அடியவர்
மனத்தில் குடிகொள்வதையே விரும்பும் பண்புடைத் தலைவா!
கைலாச நாதரும்,கல்யாணி அம்மையும் குடி கொண்டு காட்சி தரும் புனிதமான கன்னியாகுடீ
முருகனே!உன் இரு கை கொட்டுக!
நன்கு விளைந்த வயல் செல்வா வளம் கொண்டு,சிவப்பணி ஆற்றும் மக்கள் வாழும்
கன்னியாகுடியில் அருள்புரியும் குகனே!உன் இரு கை கொட்டி ஒலி எழுப்பி அருள்வாய்.
விளக்கம்
மடந்தையர்--கார்த்திகை மகளிர்
மகபதி ==இந்திரன்
இராப்பகல்...உம்மைத்தொகை இரவும்,பகலும்
திகம்பரன்---சிவபெருமான் இவ்வூரில் பெயர் கைலாச நாதர்
திரிபுரை ===அன்னை பார்வதி.. இவ்வூரில் பெயர் கல்யாணி அம்மை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக