நன்றியுரை
1. வணக்கம். உலகெலாம் உணர்ந்து பலகலை படைத்துவைத்த பரம்பொருள்
அவனது பாதாரவிந்தங்களுக்குப் பணிவும்,நன்றியும் கலந்த வணக்கத்தை
முதலில் போற்றி அளிக்கிறேன்.
இவ்விழா நன்கே நலம்மிக்கதாக,உளம்மிக்கதாக, நடைபெறவும்,
சான்றாண்மை மிக்க தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டும், சீர்மைமிக்க
உரையாற்றியும், சான்றோர்களுக்குப் பரிசும்,பதக்கமும் நல்கியும்,
சுவாமிநாத சதகம் என்ற நூலை வெளியிட்டும், நமக்கு நல்லருள் புரிந்த ,
தலைவர் டாக்டர் அவர்கள், ஒருநிமிடமும் வீணடிக்காத உயர்பணிக்கென்றே
தோன்றிய மாதரசி; அவர்களது பணிகளுக்கிடையே இங்கும் வந்து, நம்மோடு
கலந்து இவ்விழாவைச் சிறப்பித்தவர்; அவருக்கு உளமார்ந்த வளமான
நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக கும்பகோணத்திலிருந்து, தான்மட்டும்
வராது,மனைவி,மகளோடு வந்திருந்து, நாம் அளித்த பட்டயப்பரிசுகளை
ஏற்றுக்கொண்ட சிவஸ்ரீ.ப.கணேசகுருக்கள் என்ற சான்றோர்க்கு, அவரது
குடும்பத்தார்க்கும் நமஸ்கார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழிசை வடிவான சிவபிரானை மயிலைக் கபாலியை நாளும்
பண்ணிசையால் போற்றுகின்ற இசைமாமணி.ப.சற்குருநாத தேசிகர்
ஐயா அவர்களின் வருகை, வளம்காட்டிய பண்வரிசை , போன்றவற்றால்
நம்மை மகிழ்வித்து, நமது பரிசாவுகளையும் ஏற்றுக்கொண்ட பண்பாளருக்கு
மனமார்ந்த நன்றியைப்படைக்கிறேன்.
சுவாமிநாத சதகம் என்ற நூலை நன்கு ஆய்ந்து அதுபற்றிய பெரும்
ஆய்வை வழங்கிய கலவல கண்ணன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி
முன்னாள் தலைமை ஆசிரியர் முத்துசுவாமி அவர்களுக்கு உளமார்ந்த
நன்றி; மனமார்ந்த நன்றி.
நூல் முழுவதையும் கரைத்துக் குடித்தாற்போல நயங்கள், அணிகள்,
அழகுகள் எனப்பட்டியலிட்டு விரிவுரை அருளிய திருமதி. சித்ரா ராமசாமி
அவர்களுக்கு மகிழ்வும், அன்பும், பணிவும் கலந்த நன்றியைச்
சமர்ப்பிக்கிறேன்.
இந்த நூலுக்கு அழகிய அணிந்துரை வழங்கிச்சிறப்பித்தவர் திரு.ஜி சேகர்.
அவருக்கு நன்நன்றி. அதுமட்டுமல்ல நூலின் அச்சிடும் பணியில்
ஆங்காங்கு தோன்றும் பிழைகளைக் கவனித்துத் திருத்தி உதவிய சேகரின்
பணி போற்றத்தக்கது. அதற்காகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விழாவிற்கு இடம், உணவு, கலைமேம்பாடு தழுவிய மேடை
போன்றவற்றை ஆண்டாண்டும் வழங்குகின்ற "விபைவ்" ஹோட்டல்
இயக்குனர்கள் ஐவருக்கும், எனது நன்றி உரித்தாக்குகிறேன்.
விழாவிற்கு வருகை தந்தருளிய சான்றோர்க்கு பணிவுநன்றி
நூலை வெகுவிரைவாக அச்சிட்டு வழங்கிய அருண்குமாருக்க
நன்றி சொல்ல சொற்களே இல்லை; அப்படி, தக்கதருணத்தில்
அவர் உதவி செய்துள்ளார். அருணுக்கு சிறப்பு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக