1. இறைவணக்கம் .. தேவார இசை மாமணி திரு. ப. சற்குருநாத தேசிகர்
அவர்கள்.
2. வரவேற்புரை .. எனது தந்தை முனைவர். சுவாமி. சுப்பிரமணியன் .
அவர்கள்.
3. எனது தந்தையின் 84 ஆம் பிறந்த நாள்நூல் வெளியீட்டு விழாவையும்,
சான்றோர் போற்றும் விழாவையும் தலைமையேற்று நடததி க்கொடுக்க
வந்துள்ள டாக்டர் . சுதா சேழையன் அவர்களுக்கு செல்வி. அபிலாஷா
மாலை அணிவிக்கிறார் திருமதி. சுபலதா சரத்பாபு அவர்கள் பொன்னாடை
போறதுவார்கள். திருமதி. அனு கல்யாணராமன் அவர்கள்
நினைவுப்பரிசினை வழங்குவார்கள். பன்முகத்தன்மை கொண்ட தலைவர்
அவர்கள் விழாவைத் துவாக்கிவைத்துத் தலைமையுரை ஆற்றுவார்கள்.
தலைவர் உரை
4. சிறப்புமிக்க சீரிய உரைக்கு மிக்க நன்றி.
எனது தந்தையின் பிறந்தநாள் விழா என்பதில் போற்றத் தக்க
; இரண்டு நிகழ்ச்சிகள் நடை பெறும் ஒன்று நூல் வெளியிடல்,
மற்றொன்று சைவ ஆலயங்களில் பணிபுரியும் சிவாசார்யார்
ஓதுவாமூர்த்திகள் ஆகிய இரண்டு பெருமக்களை அழைத்து,
அவர்களுக்கு பட்டம் அளித்தல் .பொன்னாடை போற்றுதல்,
ஐயாயிரம் பொற்கிழி வழங்குதல் இவ்விரண்டும் காலம் காலமாகத்
தவறாது செய்து வருகிறார் என் தந்தை. அதன்படி,
இவ்வாண்டு சுவாமிமலை சுவாமிநாத சதகம்" என்னும் நூலை
வெளியிட இருக்கும் இந்த நேரத்தில் சுவாமிமலை எம்பெருமான்
மாமுருகன் வீற்றிருக்கும் சிவாலயத்தில் பரம்பரை பரம்பரையாகச்
சிவப்பணி ஆற்றிவருகின்ற சிவாசார்யப் பெருந்தகை சிவஸ்ரீ.
ப.கணேசகுருக்கள் அவர்களுக்கு இவ்வாண்டு "திருநிறைச்செல்வர்"
என்ற பட்டத்தையும் .பொற்பதக்கத்தையும்,பொற்கிழியையும் தலைவர்
அவர்கள் வழங்க இருக்கிறார்கள். சைவாகமவித்துவானாகிய ஐயா,
ஆங்கிலத்திலும் வணிகவியல் பட்டம் பெற்றவர் ஆவார்.
அவருக்கு, திரு.எஸ் .அபிஷேக் மாலை அணிவிப்பர்;
திரு.கே.சரத்பாபு அவர்கள் பொன்னாடை போர்த்துவார்.
தலைவர் அவர்கள் தமது பொற்கரங்களால் அவருக்கு, பதக்கம்
அணிவிப்பர்; பொற்கிழி வழங்குவார்; எனது தந்தையார் சான்றிதழைப்
படிப்பார்; தலைவர் அதனை சிவாசார்யாருக்கு வழங்குவார்.
பரிசுகளை வழங்கிய தலைவருக்கும், அதனைப்பெற்றுக்கொண்ட
சிவாசார்யாருக்கும் நன்றிகள் பல;
5. திரு. ப.கணேசகுருக்கள் அவர்களது ஆசியுரை
ஆசிகள் வழங்கிய ஆசார்யருக்கு பணிவான நன்றி.
6. சிவாசார்யாரைப் போலவே திருமுறைப்பணி புரியும் சைவக்கோயில்
ஓதுவாமூர்த்திகளைப் போற்றும் முறையில், இந்த ஆண்டு,
மயிலாப்பூர் கபாலீச்சரர் கோயிலில் நெடும்பணி ஆற்றிவரும் தேவார
இசைமணி. திரு. ப. சற்குருநாத தேசிகர் ஐயா அவர்களைப் பாராட்டும்
வகையில்,திரு.அபிஷேக் தேசிகர் ஐயா அவர்களுக்கு மாலை அணிவிப்பார் .
திரு. சரத்பாபு அவர்கள் பொன்னாடை போற்றுவார்கள்.
தலைவர் அவர்கள் தமது பொற்கரங்களால் பட்டம் பொறிக்கப்பட்ட
பதக்கத்தை அணிவிப்பர். பொற்கிழி வழங்குவார். எனது தந்தையார்
பட்டயச்சான்றிதழைப் படிக்க, அதனைத் தலைவர் தேசிகருக்கு வழங்குவார்.
பரிசுகளை வழங்கிய தலைவர் அவர்களுக்கும், அதனைப்
பெற்றுக்கொண்ட தேசிகர் ஐயா அவர்களுக்கும் நன்றி.
7. திரு. தேசிகர் ஐயா அவர்கள் பண் பாடி , தமது ஆசியுரையை
வழங்குவார்.
8. சுவாமிமலை, சுவாமிநாதக் கடவுளைப்போற்றும் வண்ணம் எனது
தந்தையார் இயற்றிய சுவாமிநாத சதகம்" என்ற நூலை.மதிப்பு
கெழுமிய தலைவர் அவர்கள் இப்பொழுது வெளியிடுவார்.
முதல் நூலை, திருமதி பிரேமா சுப்பிரமணியன் அவர்கள் பெற்றுக்
கொள்வார்கள். நானும், சுபாவும், திரு.சரத்பாபுவும் நூலைப்
பெற்றுக்கொள்கிறோம்.
நூலை வெளியிட்ட தலைவர் அவர்கள் வாழ்த்துரை வழங்குவார்.
நூலை வெளியிட்டமைக்கும் வாழ்த்துரை வழங்கியமைக்கும் நன்றி.
9. நூல் பற்றிய ஆய்வுரை.
எனது தந்தையின் நண்பரும், பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார்
மேல்நிலைப்பள்ளி மேனாள் தலைமைஆசிரியரும் ஆன , திரு.முத்துசுவாமி
எம் ஏ எம்லிட் அவர்கள் நூல்பற்றிய ஆய்வுரை வழங்க வருகிறார்.
அன்னாருக்கு, திரு.அபிஷேக் மாலை அணிவிப்பார் .
திரு.சரத்பாபு அவர்கள் பொன்னாடை போர்த்துவார். செல்வி.அபிலாஷா
நினைவுப்பரிசை வழங்குவார்.
நூலின் விளக்கமாய், நல்லுரை வழங்கிய தலைமையாசிரியர்
அவர்களுக்கு மிக்க நன்றி.
அடுத்து, "சிவபக்த விலாஸ உறுப்பினரும், எனது கந்தையின் மாணவர்
இராமசாமி அவர்களின், துணைவியாரும், வைணவ இலக்கியங்களை
ஆராய்ந்து, பட்டங்கள் பெற்றவரும்,வங்கிப்பணியில் இருந்து ஒய்வு
பெற்றவரும் தற்பொழுது குடந்தையில் வசிப்பவருமான நற்றமிழ் நாயகி,
சித்ரா ராமசாமி அவர்கள் நூல் பற்றிய ஆய்வுரையை வழங்க வருகிறார்.
அன்னாருக்கு, அபிலாஷா மாலை அணிவிப்பார் திருமதி சுபாசரத் அவர்கள்
பொன்னாடை போர்த்துவார். திருமதி. அனு கல்யாணராமன் அவர்கள்
நினைவுப்பரிசினை அளிப்பார்.
ஆய்வுரை
நூலின் பக்கங்கள், பாடல்கள், மேற்கோள்கள், போன்றவற்றை எல்லாம்
நமது மனக்கண் முன் நிறுத்திய சித்ரா அவர்களுக்கு நன்றி.
10. நன்றியுரை நிகழ்த்த நானே வருகிறேன்.
11. திருக்கடைக்காப்பு ....பண்ணிசைக்க தேசிகர் ஐயா அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக