6.4. கயமுகன் தோற்றம்
1. மற்றும் உரைப்பேன் மழகளிற்று மாமுகன்
தோற்றம் ததீசி உரை.
2. அரக்கர் குலமன்னன் ஆன்றதோல்வி, ஆசான்
அருளாய்வு வேண்டிநின்றான் முன்.
3. மாகதன் மாவழி தோன்று மழகளிறு
வாகை வளைத்திடும் வாழ்.
4. அசுரகுரு ஆசியேற்று, அந்திமலர் ஒன்று
வசுரகுலம் ஆள மகன் ஆய்ந்து.
5. விபுதை வருகாலை வேழப் புணர்வு
விபுதை புணர்களிறு போல்.
6. கயமுகன் சீற்றம்; கடுந்தவ மாற்றம்;
வயப்புலி நோற்பு வளம்.
7. மணந்தான் அசுர மகள் மாதவர் அஞ்சும்
குணத்தான் குறைத்தான் குலம் .
8. பிறப்பான் பெருமகன்; பேதைமை நீக்கு.
அற க்கடவுள் அம்மை கயம்.
9. கயமுகன் தோற்றம் கசடுகள் நீக்கம்;
கயமுகன் காணவே தோன்று.
10. பெரும்போர்; திருமகன் வென்றான். பேதைக்
கருமேகக் காட்டில் நிலா.
பொருள்
1. தக்கனுக்குச் சிவனின் பெருமையை உணர்த்தி வந்த ததீசி முனிவர்,
விநாயகப் பெருமானின் தோற்றத்தையும் உரைக்கிறார்,
2. அசுரேந்திரன் என்ற அசுரகுலமன்னன் தேவர்களிடம் தோற்றுப்போய்
ஆங்காங்கு ஒடி ஒளி வதையும், தேவர்களை எதிர்க்க வல்ல அசுரவீரன் இல்லாமையும் எண்ணி வருந்தினான். இதை மாற்ற வழி தேடினான்;அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய அசுரகுரு சுக்கிராச்சாரியாரை நாடினான்.
3. சுக்கிரன் சொன்னார்" மன்னா! "மகதர்" என்று ஒரு மாமுனிவர் உள்ளார்.அவருக்கும், அசுரகுல அழகி ஒருவருக்கும் புணர்வு உருவாக்கப் படவேண்டும். அப்புணர்வில் தோன்றும் யானை முகக் குழந்தை மாவீரனாகி அசுரகுலத்தைக் காப்பான். அதற்கான முயற்சிகளை உடனே செய்"!என்றார்.
4. ஆசானை வணங்கி விடைபெற்ற மன்னன், அழகிய கன்னிப்பெண்ணைத் தேடுகிறான். "விபுதை" என்ற அசுரகுல அழகியைக்
கண்டு, அவளோடு அசுரவம்சம் பற்றிப் பேசி, அவளை மகத முனிவரது
ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கிறான்.
5. அவளும் காலத்திற்குக் காத்திருக்கிறாள். அந்நாளும் வருகிறது. ஒருநாள் அவர்முன் வந்து அவரை வணங்குகிறாள். அவள் வந்த நேரத்தில் முனிவர் மலைச்சாரலில் ஒரு காட்சியைக் காண்கிறார்.இரண்டு யானைகள்
இணை ந்து இன்பம் துய்ப்பதைக் காண்கிறார். எங்கோ மறைந்திருந்த அவரது மனம் காம இச்சையில் விழித்தெழுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்; ஒன்றிய உள்ளத்தால், முனிவரின் ஆசைப்படி இருவரும் யானைகளாக மாறிப் புணர்கின்றனர். அவர்களுக்கு யானை முகம் கொண்ட குழந்தை தோன்றுகிறது.
6. கயமுகாசுரன் வளர்ந்து ஆளாகி,அடக்க யாருமில்லாத காளையாகச்
சுற்றித்திரிகிறான், சுக்கிரர் அவனை நல்வழிப்படுத்தித் தவம் இருக்கச்
சொல்கிறார் நான்முகனிடம் நிறைய வரங்களை அடைந்த கயமுகன்
உலகோரைப் படாத பாடு படுத்துகிறான்.பலருடன் போரிட்டு வெல்கிறான்; தேவர்களை வென்று பெருமிதம் கொள்கிறான்;
7. அசுரேந்திரனின் மகளான "விசித்திர காந்தி" என்பாளை மணந்து கொள்கிறான். விண்ணவர்களையும், அந்தணர்களையும் முனிவர்களையும் துன்பப் படுத்துகிறான்.அரக்க குணம் வாய்ந்த காயமுகன் தேவ குலத்தை வேரோடு அழிக்க முற்படுகிறான்.
8. விண்ணவர்,பிரமனை நாட, நான்முகனோ திருமாலை நாட ,திருமாளோ எல்லோரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானைப்
போற்றித் தொழ ,அவரோ "கவலை வேண்டாம். எமக்கு ஒரு மகன்பிறப்பான்; அவன் இவ்வரக்கனை அழித்து, உங்களைக்
காப்பான்" என்று ஆறுதல் அளிக்கிறார். அன்றே தனது தேவியுடன்
மலைநாடு நோக்கிச் செல்கிறார். வளம் பல கண்ட காலை அங்கே
அன்பொழுகக் கொஞ்சி மகிழும் இரு யானைகளைக் கண்டு, இறைவியோடு அவரும் யானையாக மாறி, இன்பம் துய்க்கிறார்.
அங்கே யானைமுகக் கடவுள் தோன்றுகிறார்.
9. வினைகளை நீக்கும் கடவுளாக அவர் மாறி, உலக ஆன்மாக்களின்
துன்பம் போக்குகிறார்.கயமுகாசுரன் ஆற்றும் கொடுமைகளை அறிந்து
அவனை அழிக்க முடிவு செய்து,அவனோடு போர் புரிய அவன் முன் தோன்றுகிறார்.
10. இருவருக்கும் பெரும்போர் நடைபெறுகிறது.முடிவில் அரக்கன் அழிக்கப் படுகிறான். அரக்கர்களின் தீய ஆட்சி அழிந்து,அங்கே நல்ல
ஆட்சி தொடங்குகிறது.இருள் விளக்க நிலவொளி உதயமாயிற்று.
விளக்கம்
1.மழ களிற்று மாமுகன் = விநாயகர்
2. ஆன்ற தோல்வி = தேவர்களிடம் தோற்றோடுதல்
3, மாகதன் = மகத மாமுனி
4. அந்திமலர் = உவமையாய் விபுதையைக் குறிக்கிறது
5. விபுதை = அசுரகுல அழகி
6. வளம் = வெற்றி
7. குலம் = தேவகுலம்
8. கயம் = யானை
9. கசடுகள் = துயர்கள்
10.கருமேகக் காடு =அசுரர் ஆட்சித் துயர்
இலக்கணம்
மழ களிறு ................................................உரிச்சொற்றொடர்
மதகளிறு ..................................................இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
மேகக்காடு ...............................................உவமைத்தொகை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக