இயற்கை இறைவன் தமிழ்
சுவாமி.சுப்பிரமணியன்
உலகம் உவகை உதிமதி இயற்கை:
உணர்வு உருவம் உறுமன நினைவு:
அலைகடல் அதுதரு அமைப்பே அமைதி:
அசைமன அதிர்வினில் அகலாப் பிடிப்பு:
கலைகவின் மலரிதழ் கனியுரு முதற்படி:
கனைகுரல் கலைச்சிறை பறவைகள் கணக்கில:
மலைமுகில் மழைமுகில் மரஞ்செடி உறுதுணை:
மனைவளர் விலங்கினம் மனிதரின் மாத்துணை.
வளர்பயிர் வனமரம் வகைவிரி வளங்களே:
வயல்வெளி வளையுயிர் களைமலர் வரப்பெலி:
இளவேனில் இதம்தரு நறுமணக் காற்றுடன்
இயல்பொழி எழிலணை குளிர்சுக இனிமையே"
தளிரிளங் குழலொடு தவழிசை மிளிர்நிலம்:
தளர்நிலைத் தலைசாய் தரைவிரி தனநெல்:
பொலிவுடைப் பொழிலுடைப் பொதும்பரின் புனைமேனி:
புகலிறை , பழந்தமிழ், இணைந்திசை பரப்பிடும்.
( வேறு)
எண்ணத்தில் எண்ணுகின்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு:
எண்ணிடினோ எட்டாத இடம்நோக்கும் எழில்குவிப்பு:
வண்ணத்தில் வடிவத்தில் வந்துதிக்கும் பேரமைப்பு:
வற்றாத வளக்கருணை வணங்குவோரின் வாழ்த்தமைப்பு :
தன்னலமே தலைதூக்காத் தலைமைக்குத் தனிச்சான்று:
தவழ்ந்தோங்கும் தயைகுணத்தால் தாய்போன்ற தனிப்பண்பு:
மண்ணகமோ விண்ணகமோ மாறாத மாத்தலைமை:
மகிழ்கருத்தார் மறுகருத்தார் மாறிமாறிக் கூறுசால்பு.
பழமைக்கும் புதுமைக்கும் பாலமான பண்புகொண்டு,
பழக்கத்தின் நடைமுறையை நெறிப்படுத்தும் நிலைநின்று,
உழல்மனத்து உருவான உருவனப்பில் காட்சிதந்து,
உலகத்து உயர்நெறிகளில் ஒன்றாகித் தனியாகி,
அழல்நெருப்பு, ஆற்றுவெள்ளம், அலை,மலை ,எனத் தோற்றமுற்று,
அணுதொட்டு, ஆன்றவானம் அதுதொட்ட அனைத்துமாகி,
கழல்கண்டேன், கனல்கண்டேன், கணக்கற்றோர் கருத்துமாகிக்
கற்பனையோ, சொற்பதமோ காட்சிதரு மாட்சிமையே.
(வேறு)
கனிதருசுவை கதிதருநடை கயல்விழிகடை கசிந்திடுமருள்
பனிதருகுளிர் பனையுயர்பணி பழம்பொழிலுரு பலர்புகழ்நிலை
இனிஇதன்நிகர் இலைஎனும்சொலில் இதனொடுபல மொழிமறைந்திடும்
புனிதமுதல் கடைஇடை எனும் தலைமரபினின் தமிழமுதமே.
அமுதமாம்மொழி அறிவியல்செயல் அனைத்துலகிலும் அதிசயமாம்.
அமுதமெனநிலை அழிவினைத்தொடா அடைந்தநல்மொழி அதிசயமாம்.
இமிழுலகினில் இயல்தனையுரை நிலப்பகுமுறை அதிசயமாம்.
இறைவனின்புகழ் எடுத்துரைப்பதில் எழில்தமிழ்முறை அதிசயமே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக