திரு ஞான சம்பந்தர் தேவாரத்தின் முழுமைப்பொருள்
இறைவனும் இயற்கையும் ஒன்றே "
1.நூல் எல்லை .......இரண்டாம் திருமுறை திரு ஞான சம்பந்தர் தேவாரம்
2.நோக்கம் ........பக்தி இலக்கியமான தேவாரம் இறைவனைப் போற்றும்
முறையில் இயற்கையும் பங்கு பெறுகிறது.
ஆ. வருணனைகள் அணிக்காக மட்டுமல்லாது ஆழ்ந்த பொருள் நுணுக்க
மேம்பாட்டில் இறைத்தன்மையை இயற்கையோடு இணைக்கிறது.
இ . இன்பியல் இயற்கை வருணனை கூட,இறைமை நோக்கிலேயே
படைக்கப் படுகிறது.
ஈ . .தலங்கள்,நீர்நிலைகள்,மரம்,செடி,கொடி .மலர் எனப் பல்வேறு இயற்கை
அமைப்புகளும்,இறைவனைச் சார்ந்தே அமைந்துள்ளது.
ஊ. இறைவன் ..இயற்கை..இரண்டையும் ஒன்று படுத்தும் இரண்டாம் திருமுறை.
எ, பாடல்.காட்சிகள் வழியே இயற்கை,இறைவன் ஒற்றுமை காண்பதே
நோக்கம்.
3.சம்பந்தர் தேவாரத்தின் அமைப்பு முறை
4. இரண்டாம் திருமுறை போற்றும் தலங்கள் ,பாடும் பதிகங்கள்
5.இலக்கியக் கொளகை கொண்ட வருணனைகள்
6. நானில வருணனைகளில் ஒன்றிய தன்மை
7. சங்க இலக்கியங்களிலிருந்து மாறுபடும் தேவாரம்
8.இயற்கை வளம் காண்பதில் உள்நோக்கம் இறையுணர்வே
9.வருணனையில் சங்க இலக்கியங்களும் சம்பந்தர் தேவாரமும்
என்னும் நோக்கில் ஆய்வு படைத்தல்
10. பின்னிணைப்பாக சம்பந்தர் வரலாறு,பாடல் வைப்பு முறை படைத்தல்
------------------------------------------------------------------------------------------------------------------
தோற்றுவாய்.........சைவ சமயத்தின் சான்றாக,அடிப்படையாக,விளங்குவது
பன்னிரு திருமுறையாகும்.முதல் மூன்று திருமுறைகளை பாடியவர் ஞான
சம்பந்தர் ஆவார்.மூன்று வயதிலேயே இறைவி தந்த ஞானப் பாலால்
பாடத்துவங்கிய குழந்தை ஆளுடைய பிள்ளை .பதினோரு பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய வர் ,முதல் ஏழு பாடல்களில் வருணனையும்,
எட்டாவது பாடலில் இராவணன் பற்றிய செய்தியும்,ஒன்பதாவது
பாடலில் அரி,அயன்,காண இயலாத சோதி வடிவத்தையும்,பத்தாவது
பாடலில் சமண சமயம் வென்ற செய்தியும் ,பதினோராவது பாடல்
பாடற்பயன் பற்றியும் விளக்கும் மரபினைக் கொண்டவர் சம்பந்தர்.
அவரது இயற்கை வருணனைகளில் இறைவன் காட்சி தருவதைக் காணலாம்.
ஐவகை நிலங்களில் ஆண்டவக்கோலம் ...
குறிஞ்சி .....குற்றால மலைக் கடவுள்:குற்றாலீசர் அவரைப்பணிய வரும்
மழ களிறு,அதன் அன்புப் பிணை பிடி.மலை முகட்டிலிருந்து கீழ் இறங்கி
வரும் யானைகள்,தன் தலையிலே வேங்கைமரப் பூங்கொத்துக்களை
ஒடித்துச் சூடிக்கொண்டு இறைவனைப் பணிய வருகின்றனவாம்.
"பூந்தண் நறு வேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற் பொலியவேந்திக்
கூந்தற்பிடியும் களிறும் உடன் வணங்கும் .குறும்பலாவே"
என விளக்குகிறார்.
முல்லை ,மருதம்,நெய்தல் போன்ற நிலவருணனைகள் ஆங்காங்கு
விளக்கப்படும்.
இயற்கையே இறைவன் .....மூன்று திருமுறைகளிலும் முதல் ஏழு
பாடல்களை இயற்கை வருணனைக்கு என வகுத்த சம்பந்தர் போகும்
தலங்களின் அழகை இயற்கையை இறை நோக்கத்தோடு பார்க்கிறார்.
"கிண்ண வண்ண மலரும் கிளர்தா மரைத் தாதளாய் ,
வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி"(138.3)
அமைதியே வடிவான சிவபெருமானின் ஊழிக்கால சங்கார மேம்பா ட்டை
அன்னப்பறவையின் வாயிலாக ,கிண்ணம்போல் மலர்ந்த தாமரை மலரின்
தாதினை உண்டு,வண்ணமண்ணில் வைகும் அன்னப்பறவை வாழும் திருவலம்சுழி எனப்பாடும் கால்,அதன் உட்பொருளாய் அமைதியே
உருவான அன்னம்,அதன் மென்மையான உணவு,ஆயினும் அது
வண்ண நறுமணல் நடுவே அமரும்,என்பதால் ,மென்மையான இறைத்தன்மை புலப்படும்.
திருவனேகதங்காவதம் என்னும் குறிப்பெதுவும் இல்லாத வட
நாட்டுத் தலத்தை (உரையாசிரியர் அனேகதங்காபதம் என்றதற்கு,வடநாட்டில் உள்ள மலை"என எழுதுகிறார்)இயற்கை கலந்து பாடுகின்ற சம்பந்தர்
"வெருவி வேழமிரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்
குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெளி
அருவி பாயுமணி சாரல னேகதங் காவதம்"
எனப் பாடுகிறார். இங்கு ஆணவம் முதலிய ஐவகைகளை யானையாகவும்,
அவைகளை அஞ்சி அடங்கச்செய்யும் இறைவன் அருளாக அருவியையும்,
அவ்வருள் நல்கும் வீடுபேற்றுப் பரிசாக முத்து ,வைரம் போன்றவைகளையும்
படைத்துப் பாடியுள்ளார்.இயற்கை வருணனை அழகு இறைத் தன்மை
சார்ந்த சிறப்போடு விளங்குகிறது.
இரண்டாந்திருமுறை பதிகங்கள்,பண்கள் தலங்கள் .....
122 பதிகங்களும்,90 தலங்களும் ,6 பண்களும் கொண்ட இரண்டாந்திருமுறை ,சிறப்பான வரலாறுகளையும் தந்துள்ளது.
திருமருகல் என்ற ஊரிலே பதிகம் பாடி,வணிகன் ஒருவனுக்கு உயிர் தந்தது,
பாண்டியனது வெப்பு நோய் தீர,திருநீற்றுப் பதிகம் பாடியது,
எந்த ஊர் என வினவிய பாண்டியனுக்குச் சீர்காழிப் பெருமை விளக்கியது.
பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்கியது,
நாளும் கோளும் சிவனடியாரை ஒன்றும் செய்யா ."எனப்பதிகம் பாடியது.
இறுதியாக .....தேவாரங்களில் இயற்கையை வருணித்துப் பாடியவர்
சம்பந்தரே எனலாம்.இயற்கை அழகும்,இறைமைப் பண்பும்
ஒன்றிவிளங்குவதும் அவர்தம் பாடலின் சிறப்பு எனலாம்.இதனை
வரும் பல்வேறு கட்டுரைகளில் காணலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக