சனி, 13 மே, 2017

குருவருளுக்கு நன்றி

                              குருவருளுக்கு நன்றி

அருளாம்    அறப்பணி,     விருப்புடை    குருவே!
கருமா      முகிலெனக்     கருணைத்      திருவே!
பெருமான்    சிவனவன்     திருவடி         நிழலே!
திருவா       வடுதுறைக்     குருமா          மணியே!

அலைசார்    கடலாழ்       அகலொளிர்    அறிவே!
மலைசார்     மணியென    மகிழ்வுடை     உரையே!
தலைசார்     நிலவணி      தத்துவ            விளக்கே!
கலைசார்     கலங்கரை   நலத்துறைசை மணியே!

அணையா     விளக்கொளி    அவனி      காக்க.
துணையா     வருங்கவி      தமிழினைக்  காக்க.
பிணையாம்   பேரிடர்    புன்னகை          காக்க.
இணையாம்   இறைவன்     எழில்மிகு     மணியே!

பனிநிலக்       குளிரிள    நனிமன         முனிவரே!
கனிச்சுவைக் கவிதையின் கலைமிகு  தமிழே!
மணித்துளி  நிலையிலும் மனத்தமர்     மகிப!
பணிவதில்    பெருமிதம்: படைக்கிறேன் நன்றியை.






15.5.17
சென்னை....73.                                                 தங்கள்

                                                               சுவாமி.சுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக