ஞாயிறு, 7 மே, 2017

         தொடர்ச்சி
               சைவப்புராணங்கள்
1.திருவிளையாடற்புராணம்........நம்பி,பரஞ்சோதி முனிவர்.
2.கோயிற்புராணம்......தில்லை வரலாறு
3.அருணாசலப்புராணம்.......திருவண்ணாமலை வரலாறு
4.குற்றாலப்புராணம்
5காஞ்சிப்புராணம்
6.தணிகைப்புராணம்....திருத்தணி வரலாறு போன்று. பலப்பல காணப்படுகின்றன.
                பெரிய புராணம்
மிகப்பெரிய,பெருமை வாய்ந்த புராணம்
இறைவனே "உலகெலாம்"என முதலடி அருளிய புராணம்
நாயன்மார்கள் வரலாறு கூறும் புராணம்
இந்நூலின் சரிபாதி செய்யுள் திருஞானசம்பந்தர்வரலாறு ஆகும்.ஆதலின்,இதை"பிள்ளை பாதி
புராணம் பாதி"என்பர்.
பெரிய புராணம் இடற்றிய "சேக்கிழார்" வரலாற்றை,சேக்கிழார் புராணம் விளக்குகிறது.
மாணிக்க வாசகர் வரலாற்றை "திருவாதவூரடிகள, புராணம்" விளக்குகிறது.
                       தலபுராணங்கள்
தென்னாடுடைய சிவன் வீற்றருளும் கோயில்கள்,தலம்,மூர்த்தி,தீர்த்தம என்ற அமைப்பில்
வரலாறு படைப்பன,தலபுராணங்கள்.முற்காலத்திலும்,இடைப்பட்ட காலத்திலும்,
தற்காலத்திலும் கூடக் கோயில் வரலாறுகள புரணங்களாகப் படைக்கப் பட்டுள்ளன.
சைவம்,சிவ வழிபாடு,பூஜை முறை போன்றவைகளும் விளக்கப்பட்டுள்ளன.
      திருக்குருகூர் மான்மியம்,கூடற்புராணம்,திருவேங்கடத்தல புராணம்,போன்ற வைணவத்தலபுராணங்களும்,
    காந்திபுராணம்,மேருமந்தர புராணம்,ஶ்ரீபுராணம்,போன்ற சமணப்புராணங்களும்,
சீறாப்புராணம்,முகையதீன்புராணம்போன்ற இஸ்லாமியப்புராணங்களும்,
தேம்பாவணி அன்ன கிறித்தவ நூல்களும்கூடப் புராண அமைப்பில் காணப்படுகின்றன.
      17,18. நூற்றாண்டில் தோன்றிய சாதி சார்ந்த புராணங்களும் வரலாற்றைப் பறை
சாற்றுகின்றன. செங்குந்தர் புராணம்,விசுவகர்மர் புராணம்,சீர்கருணர்புராணம்,
சான்றோர் புராணம்,குலாலர் புராணம்,வீரநாராயண விசயம் ஆகியன.

                    முடிவாக........
    புராணம் என்பது ஒருகடல்.   அல்ல .எழுகடல்.அகலமும் ஆழமும்வாய்ந்த கடல்அதை விளக்க,
வரையறுக்க மூவேழ் பிறவிகளும் போதா.ஆயினும்,காற்றில் கடல்லை வீசும் கடல் நீர்த்துளிச்
சுவடாய்ச் சிறிது,சிறிதினும்சிறிது படைத்தேன்.அவையோர் ஏற்றருளின் அகமகிழ்வு.
குறை தோன்றின் பொறுத்தருள்க.
                 நன்றி
   புராண அமைப்புகளைக்கண்டறியப் பெரிதும் உதவிய நர்மதா பதிப்பக. "பதினெண் புராண நூல்
படைத்த திரு,கிருஷ்ணமாச்சாரியாருக்கும்,ஏனைய வரலாற்றாசிரியர்களுக்கும் எனது நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக