ஞாயிறு, 2 அக்டோபர், 2016

                           காப்பு 
                   நேரிசை  வெண்பா 

பொன்திகழ்ச் செம்மேனி: பண்திகழ்ச் செவ்விதழ்: 
மண்திகழ் மாமுருகன் போற்றிடும்  ----கண்தோகை 
வண்டமிழ்த் தூதுநூல் வாழ்த்துவாய் ஓங்காரா!
தண்ணளித் தந்திமுகா காப்பு.

                               பொருள் 
 கன்னியாகுடி முருகன் மஞ்ஞை விடு தூது எழுதத் தொடங்கியதும்,காப்புச் செய்யுளால் 
கணபதி போற்றப் படுகிறார்.பொன்போன்ற மேனி,பொன்னாபரணங்கள் அணிந்த திருமேனி:
இயல்,இசை,நாடகமாம் முத்தமிழ் திகழும்,தங்கி அருள் காட்டும் செம்மையான இதழ் கொண்ட 
திருவாய்:நிலவுலகத்தின் நீள்புகழ் கொண்ட கன்னியாகுடி முருகன்:அவனைப் போற்றிப் 
புகழும் நூல்:முருகன் மீது அன்புற்ற தலையின் வாயிலாக,அவளின் காதல் விண்ணப்பம் 
தாங்கிய மயிலின் வாயிலாக,முருகன் புகழ் பாடும் முருகன் மஞ்ஞை விடு தூது என்னும் நூல்:
இந்நூல் சிறக்கவும்,புகழ் பெறவும் ஓங்காரக் கடவுளே!தண்மை வாய்ந்த கருணைக்கடலே!
யானை முகத்து விநாயகப் பெருமானே!காத்து அருள் புரிவாய்.
                                   விளக்கம் 
கண் தோகை ..................அன்மொழித் தொகையாய் மயிலைக் குறிக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக