சனி, 3 செப்டம்பர், 2016

உலகம் புகழும் ஒருதனிச் செல்வன்,
பலகலை வல்லோன் பழந்தமிழ்த் தலைவன் ----வலமிடம்
நின்றருள் நித்திலச் சுடரிருவர் நீள்காந்தன்
பொன்னடி போற்றிப் புகழ்ந்திடப் பண்ணிய ----பொன்பனுவல்
அன்னவன் தன்மேல் அணங்கெனக் கொண்டமனம்
பற்றிடு காதல் பகர்ந்திடத் தூதுவிடப் -----பல்பொறி
மஞ்ஞை மணிப்பெயர் வைத்து மலர்வாயால்
அஞ்சேல்!அருந்தமிழ் ஏற்றான் அறுமுகன் ----செஞ்சேவடி
தீக்கையும்,திவ்விய மாலையும் தந்தனன்
காக்கும் கனகவேல் மாக்கவிதை மாமலராய்ப் ----பூக்கும்.
புனையும் தூதைப் புரந்திட வருக.
நினைவில் நினைந்தே நிதமும் துதிப்போர் -----பனைத்துயர்ச்
சங்கடம் தீர்க்கும் கணபதி போற்றியே
பொங்குகங்கை பூக்கும் மலர்க்கொன்றை சூடிய-----சங்கரன்
கைலாச நாதன் கழலடி வாழ்த்தியே
கைலாசன் கண்ணருள் கல்யாணி கற்பகச்  -----சைலமகள்
நல்லடி நாடிநாளும் வாழ்த்தி நலமகள்
செல்வனின் சேவடிக் காவடி தாங்கியே ----நல்லறம்
ஏற்ற இடும்பன் இருதாள் புகழ்ந்தபின்
ஆற்றல் அழகு,அருமை பெருமையுடன் ----ஏற்றான்
மயிலை,சேவலை,மகேந்திரன் மகளை,
குயில்காட்டு மானைக் குணமுடன் போற்றி,

                         பொருள்
  உலக உயிர்களால் போற்றப்படுபவன்,பலப்பல கலைகளுக்கும் தலைவன்,பைந்தமிழ்க் கடவுள்,
வலத்திலும் இடத்திலும் நின்றே,அருள்பாலிக்கும் முத்துச் சுடரொளி மங்கையராம் தேவயானை,
வள்ளியின் மணவாளன்,முருகன்:அவனது பொன்னடிகளைப் போற்றிப் புகழ்ந்து பணிந்திட ,
உருவான தமிழ் நூல் இது.
   முருகன் மீது காதலுற்ற பெண்ணொருத்தி,மயிலைத் தூதாக அனுப்பிய மடல் இது.அழகு மயிலைத்
தூதுப் பொருளாய் அமைத்ததால்,அந்த   ஆறுமுகன் "அஞ்சேல்"அளித்தேன் அன்பு மனமும்,அழகு
மாலையும் என நன்மொழி பகர்வதுபோல் .இத் தூது நூலும் அவனது அருள் பெரும்,புகழ் பெறும்
என்றே நினைந்து,இந்நூலை வாழ்த்தி அருள,முருகனை வணங்கி,
    வணங்குவோரின் தீராத துன்பங்களைத் துயர்களைக் களைந்து,அருள்நல்கும் விநாயகப்
பெருமானின் திருவடி வணங்கி,
   கங்கையும்,கொன்றை மலரும் சூடிய செஞ்சடைக் கடவுள் கைலாச நாதன் தாளினைப் போற்றி,
   கைலாச நாதரின் கருணைத் துணைவி,மலைமகள் கல்யாணி அம்மையை வாங்கிப் போற்றி,
முருகன் தாள் பணிதலை முதன்மையாய்க் கொண்டு,காவடி தாங்கிச் சேவடி போற்றும்,எமது
குல தெய்வமான இடும்பன் தாளினைப் போற்றி,வணங்கி,
    அம்முருருகனின் ஊர்தியான மயிலையும்,கொடியான சேவலையும் வணங்கி,
முருகன் கருணையில் பங்கு பெறும் தேவயானையை ,வள்ளியம்மையை வணங்கி,இந்நூலைத்
தொடங்குகிறேன்.

                                              விளக்கம்
ஒருதனி ...ஒருபொருட் பன்மொழி











--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக