அணிந்துரை
தவத்திரு.முகவர்.ஸ்ரீமத் மௌன குமார சுவாமித் தம்பிரான்
கட்டளை விசாரணை
தருமபுர ஆதீன சமயப் பிரச்சார நிலையம்,
வேளூர் தேவஸ்தான இறைபணி மன்றம்,
158/16.வடக்கு உஸ்மான் சாலை,தியாகராய நகர்,சென்னை-600017
================================================================================================
தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளில் ஒன்று பிள்ளைத்தமிழ்.இது ஆண்பால் பிள்ளைத்தமிழ்,
பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகைத்து.இவற்றுள் ஏழு பருவங்கள் இருவகைப் பிள்ளைத்தமிழுக்கும் பொருந்துவன.பின்னர் உள்ள மூன்று பருவங்களில் ஆண்பாற்பிள்ளைத் தமிழில்
சிற்றில்,சிறுபறை,சிறுதேரும் ,பெண்பாற் பிள்ளைத்தமிழில் அம்மானை,கழங்கு,நீராடல் அமைந்து,
ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப் பாடல்கள் கொண்டு அமைவன.
அவ்வகையில் எஸ்.சுப்பிரமணியன் (சுவாமி.சுப்பிரமணியன்)சிவாச்சாரியார் குலத்தில்
தோன்றியவர் தமது சொந்த ஊரான ,கன்னியாகுடியில் தம் முன்னோர் பூசித்த கல்யாணி அம்மை
உடனுறை கைலாசநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி,தேவசேனா சமேத சுப்பிரமணியர் மீது,
பிள்ளைத்தமிழ் பாடியது சிறப்பிற்குரியது.
இதற்கு முன்பாகவும்,கவிநூல் யாக்கும் பெருமை உடையவர் இவர்.இவரது,"கன்னியாகுடிக்
கந்தபுராண வெண்பா"இவரது புலமைக்குச் சான்றாகும்.முருகக் கடவுள் தமிழின் வடிவாய் உள்ளவன்
என்பதை,"நக்கீரன் அழகு தமிழே","அருணகிரி போற்றும் திருப்புகழே","குமரகுரு மகிழ் தமிழே",
"காப்பியக் கந்தனே"என,(தால -3)காட்டுவதும்,
தமிழ்ப் பாட்டி ஒளவைக்கு "சுட்ட பழம் வேண்டுமா?"எனக்கேட்டருளிய வரலாறு,(சப்பாணி-4)"இறையனார் களவியல் நூலுக்குப் பொருள் உவந்த உருத்திர சருமனார் தோன்றிய
வரலாறு,(முத்தம்--8) "ஐந்து முகத்தோடு அதோ முகம் தோன்றி"எனக் குமரகுருபரர் காட்டுதற்கு
இணங்க,அறுமுகச் சிவனாகக் கொண்டு,அடிமுடி தேடிய வரலாறு,"அடிமுடி அரி அய ன் தேடியும் காணா அறுமுகச்செல்வர்"(முத்தம்--10) "முருகக் கடவுள் தோற்றம்"(செங்கீரை--3) போன்ற வரலாறுகளும், முருகக் கடவுளின் அறுபடை வீடுகளையும்,(அலைமோதும்) எனும் (அம்புலி) சிறப்பாகக் காட்டுவதும்,திருச்சிராப் பள்ளியின் "இரத்தினாவதி"என்ற செட்டிப்பெண்ணுக்குத் தாயான
நிகழ்வை "மருந்தாளத் தாயானோன்"என்றது,(அம்புலி-9)நயமாகிறது.
அம்புலிப் பருவத்தில் சாம,பேத,தான,தண்டங்களால் சிறப்பாகச் செய்திருப்பது,அபிராமி
அம்மை,தோட்டை நிலவாக்கியது,(அம்புலி--6) தக்கன் சாபம்,இராகு,கேது பாம்புகள் விழுங்குவது
முதலான சம்பவங்களைக் காட்டியிருப்பதும்,
யார் யாருக்கு எது சிறப்பு என்பதை,
"தவத்தால் சிறந்தோர் நாடுவர் தவச்சிவம்
தலத்தால் சிறந்த தண்கன் னியாகுடி
தனத்தால் நிறைந்தோள் தவழ்மலர்த் திருமகள்
தறுகண் வீரத்தில் தமிழ்மகன் முருகனே"--என்பது (காப்பு--5)
கன்னியாகுடியின் இயற்கை வளத்தை (செங்கீரை--1) இந்நூலின் வழி மட்டுமே வருங்காலச்
சந்ததியினர் காண்பர்."செந்நெல் செவ்வயல் கன்னிவாழ் கற்பகமே"(செங்கீரை--10)இயற்கை
வளம்,நன்னிலம்,அதன்வழி பெறும் பயன்,இவைகளை நயமாகச் சிறப்பாகக் காட்டியுள்ளார்.
"கார்நெல் அறுத்துக் களத்தினில் திகழும்,கன்னி நகர்க்கற்பகமே"(தால --5)
கன்னியாகுடி வாழ் மக்கள் "திருச்சிற்றம்பலம்"என்றே வாய் திறந்து பேசுவர் என்பதை,
"சிற்றம்பலம் செவி போற்றும் கன்யாகுடி"(சிற்றில்--1) சிவமென்றே வாய் திறப்பாய்"என்பதொக்கும்.
"சுற்றமெலாம் சிவமெனும் கன்யாகுடி"(சிற்றில் ) "அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாமல்"
என்பதொக்கும்."தெருவெல்லாம் தமிழ் முழங்கும் கன்யாகுடி"(சிற்றில்==2)பாரதி கனவை மெய்ப்பிக்கும் ஊராகத் திகழ்கிறது.
" பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்...........சிதையேலே" (சிற்றில்-4)மெல்லிசை வண்ணம் வரும் வகையில் பாடியது சிறப்புடையது.
கன்னியாகுடி மக்கள் செய்நன்றி மறவாதோர்,பழமையணி பண்பாட்டுக்குரியோர்,
செருக்கறு குணத்தோர்,"செய்யும் பணி சைவம் தழை உய்யும் ஊர்ச் செல்வர்"என மக்கள் நிலை
காட்டுவது சிறப்பாக அமைந்துள்ளது.
இந்நூலுக்கு உரை ஆசிரியராகவும் திகழ்கிறார்.தாமே இதற்குப் பொருள் செய்திருக்கிறார்.
"நிலவினை மணந்து"--இங்கு நிலவுபோன்ற முகம் கொண்ட தெய்வயானை.....ஆகுபெயர்.
"நீடி சிதை--இங்கு நீண்டி என்பதன் தொகுத்தல் விகாரமாய் நீடி ...என வந்தது.
கரமலர்....உருவகம்.கனி நகர்---கன்னி நகர் என்பதன் இடைக்குறை."கஞ்சுக சட்ட நாதர்---ஒரு பொருட்பன்மொழி/ கலகல ---இரட்டைக்கிளவி. பங்கய மங்கையர்---உவமத்தொகை ..வள்ளி தேவயானையைக் குறிக்கிறது.
இயற்கை வளங்களும் இலக்கிய நயங்களும்,இலக்கண வரம்புகளும் ,மரபு
நெறி தவறாத உணர்வுகளும்,கண்ணுதல் கடவுளின் கவின் தரு குமரன் கந்தனைப் போற்றும்,
"கன்னியாகுடி முருகன் பிள்ளைத் தமிழ் நூலில் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
புதுக் கவிதையில் வாழும் கவிஞர்கள் மத்தியில் மரபுக் கவிதைக்கு வித்திட்ட
அருட்கவிஞர் சுவாமி.சுப்பிரமணியம் பிரும்மாவுக்கும் மேலானவர்.ஆம்.பிரும்மா படைக்கும்
உடம்பு,சின்னாள் பல்பிணியுற்று அழியும்.இவர் தந்த உடம்பு(கன்னியாகுடி முருகன் பிள்ளைத் தமிழ்)
அழியாதது:சிறப்புற்றது.
"கலைமகள் வாழ்க்கை முகத்தா தெனினும்,
மலரவன் வண்டமிழோர் கொள்வான் ----மலரவன் செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ் கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு.-------நீதி நெறி விளக்கம்.
இதுபோன்று பல நூல்கள் யாத்து,தமிழுக்கு அணி சேர்க்க,சுவாமி.சுப்பிரமணியம்
அவர்கட்கு,செந்தமிழ்ச் சொக்க நாதப் பெருமான் திருவருளும்,தருமை ஆதீனக் குருமணியின் குருவருளும் கிடைக்கப் பிரார்த்திக் கின்றேன்.
மௌன குமாரசாமித் தம்பிரான்
3.9.16
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கன்னிக் கலம்பகம் (கன்னி=கன்னியாகுடி)
இயற்றியவர்: சுவாமி.சுப்பிரமணியன்.எம்.ஏ.எம்.எட் .எம்.பில்.
வெளியீடு:தமிழ்க்குடில்,சென்னை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக