ஆறுதலும், அவை நாடலும்
1. கனவினுள் கந்தன் கருணை நிழலால்
மனத்துள் மகிழ்ந்தார் சுரர்.
2. சிறைப்படு தேவர்தம் சிந்தனை மாற்ற
மறைத்துணை தோன்றினார் ஆங்கு.
3. வருவார் வடிவேலன் வாட்டம் அகற்ற;
பெரும்போர் துவங்கும் அறிக.
4. அரக்கர் அழிவர் அகந்தை அழியும்;
இரக்கம் எளியோர் நலம்.
5. இன்னபல சொல்லி இனியபணி ஆற்றிடத்
துண்ணென வானில் பறந்து....
6. காவல் கடந்து, கணத்தில் விரைந்தவர்
காவலன் சூரபன்மன் காண்.
7. நறுமணம் நற்சூழல் பொற்கூரைச் சிற்பத்
திருவழகு தேவன் வரம்.
8. வியப்பில் ஒருகணம் விந்தை புகழ்ந்து
நயமிலா நாய்க்குணம் நாடு.
9. அமைச்சர் அறிஞர் அருமைப் புதல்வர்
இமைகா தளபதிசூழ் அவை.
1௦. பல்லிய நல்லொலிப் பேரவை பார்த்து,
வில்லொலிபோல் உள்நுழை வாகு.
பொருள்
1. சூரனது ஆணையின் வண்ணம் சிறைச்சாலையில் துன்புற்றிருந்த
சயந்தனும்,பிற தேவர்களும் சிவபெருமானையும்,குமாரக்கடவுளையும் மனமுருகப் போற்றியபடி அழுது கண்ணீருடன் அப்படியே தூகமுற்றனர்.
அவர்களது கனவிலே வந்த கந்தக்கடவுள் விரைவில் சூரன் அழிக்கப்
படுவான், என்றும், சூரனிடம் தூதாக வந்துள்ள வீரவாகு உங்களைக் கண்டு, நல்ல செய்தி அருள்வார்"என்றும் கூறி மறைந்தார்.அதனால்
மகிழ்வடைந்தனர் விண்ணவர் .
2. சிறைப்பட்டுத் தவிக்கும் தேவர்களின் துயரை மாற்றிடப் போர் துவக்க இருக்கும் முருகனின் அருள் கெழுமிய செய்தியைத் தெரிவித்து,அவர்களை
மகிழ்வுக் கடலில் ஆழ்த்த அவர்கள்முன் தோன்றினார் வீரவாகு.
3. தேவர்களே! கலங்காதீர்கள்.உங்களை விடுவிக்கவும், அரகர்களது கர்வம் அழிக்கவும் விரைவிலேயே எம்பெருமான் முருகன் பெரும்போர்
துவக்க இருக்கிறார்.மனக்கவலை விடுத்து, இறைவனைப் போற்றியபடி
இருங்கள்" என்று வீரவாகு கூறினார்.
4. ஆணவ அரக்கர் கூட்டம் அழியும்; அவர்களது தீய செயல்கள் அழியும்;
அறவழி தோன்றும்; நல்லோர் மகிழ்வர்; நாடே அறத்தின்பால் நிற்கும்;
திருமுருகன் அருள் நம்மைக் காக்கும். கவலை விடுக" என வீரவாகு ஆறுதல் மொழி கூறினார்.
5. சயந்தனுக்கும்,பிற தேவர்களுக்கும் ஆறுதல் மொழி கூறி, அவர்களை
நன்னெறிப் படுத்திய வீரவாகு, தனக்கு இறைவன் அளித்துள்ள தூதுப்
பணியை விரைவாக ஆற்றிட எண்ணிச் சூரன் பேரவை நோக்கி
வானில் பறக்கத் தொடங்கினார்.தேவர்களும் முருகனை மனத்தால்
போற்றியவாறே இருந்தனர்.
6. சூரபன்மனைக் காண்பதற்காக வான் வழிப் பறந்துவந்த வீரவாகு
வழியில் கோட்டைக் கொத்தளங்களில் அமைந்துள்ள காவல் கண்காணிப்புகளை முறியடித்துவிட்டுச் சூரன் பேரவை நோக்கிப் பறந்தார்.
7. நறுமணம் கமழும் பேரவை; மணிகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய பேரவை;பொன்னால் உருவான மணிமண்டபங்கள்; நவரத்தினங்கள் இழைத்த மேல் விதானம்
வரிசையாய் முறை.தகுதிக்கேற்ப அமைக்கப்பட்ட இருக்கைகள்;
தேவ உலகுபோல் காட்சி அளித்த சூரனது அரசக் கொலு மண்டபத்தை
வியந்து பார்த்தவர் ஈசன் சிவபிரானது வரப் பெருமையையும்,சூரனது தவமேன்மையையும் நினைந்து போற்றினார்.
8. வியக்கத் தக்க பெருமைகளும், சிறப்பும், பேரவை மென்மையும் பெற்று
விளங்கும் சூரபன்மனின் வாழ்வை நினைந்து,போற்றிய வீரவாகு
அற்பனாய். கர்வமுற்ற மனத்தினனாய், கொடுங்கோலனாய், விளங்கும்
அவனது இழி நாய்க்குணத்தை நினைந்து,நினைந்து வெறுத்தார்.
9. அமைச்சர்கள், அறிஞர்கள், தவப்புதல்வர்கள், கண்ணைக் காக்கும்
இமைபோல் நாட்டைக் காக்கும் தளபதிகள்,எனப் பல்லாயிரம் பேர்
சூழ்ந்து அமர்ந்திருந்த பேரவையைக் கண்டு, வியந்து வீரவாகு பாராட்டினார்.
1௦. சூரனது பெருமையும்,சிறுமையும் பற்றி விரிவாய் ஆராய்ந்த வீரவாகு
வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல.சூரன் அவைக்குள் நுழைந்தார்.
விளக்கம்
கருணை நிழல் ..........உருவகம்
அறிக...............................வியங்கோள் வினைமுற்று
துண்ணென .................குறிப்பிடைச்சொல்
நற்சூழல்.........................பண்புத்தொகை
பொற்கூரை..................மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க
தொகை
"பல்லிய நல்லொலி" என்னும் பாடலில் உவமை அணி பயில்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக