சயந்தன் சிறையில் புலம்பல்
1. அணுவுரு வாகுதான் அக்கணம் பன்மன்
அணுகிட எண்ணியே ஏகு,
2. பானுகோபன் மாளிகை பற்பலர் மாளிகை
பானுபுகா அற்புதம் கண்டு,
3. சிவவரம் தந்தருள் செல்வவளம் சிந்தை
தவமேன்மை தானெண்ணித் தாழ்.
4. சிறைபடு தேவர்தம் சீர்கேடு பார்க்கச்
சிறையகம் சென்றார் மறை.
5. இழந்த எழில்சுகம் எண்ணி உழன்ற
விழுமகன் வெந்துயர் வீண்.
6. பெற்றோர் நினைந்து பெறுபோகம் அசைத்தனன்
உற்றசிறை நீங்கல் மிகை.
7. நீலமுண்ட காலகண்டனே! பாலன்மேல் பற்றுற்றுக்
காலடி காட்டி அருள்.
8. காக்கும் கதைகள் கருணைப் பொழிவுகள்
பூக்கும் பொறுத்துள்ளேன் வா.
9. குமரன் குணத்தால் அமரர் மகிழ்வர்
குமரா! குலமுறை கா.
1௦. கனவில் அருளிய கந்தன் துணையாய்
கணவீர வாகுவந்து கா.
பொருள்
1. மிகச்சிறிய உருவங்கொண்ட வீரவாகு மகேந்திரபுரியின் வளத்தைக்
கண்டு,அதிலே மனதைச் செலுத்தியவர்,தான் கொண்ட தூதுப் பணியை
எண்ணினார்.அப்பணி சிறக்க இப்பொழுதே சூரன் பேரவை புகுவேன்"என
எண்ணிச் சூரன் அரண்மனை நோக்கிப் பரக்கலுற்றார்.
2. செல்லும் வழியில் அழகும்,வளமும் மிக்கதாகிய பானுகோபன் மாளிகை, இரணியன்,தருமகோபன் போன்றோருடைய எழில்மிகு அரண்மனைக் கட்டிடங்கள் போன்றவற்றைப் பார்த்தபடியே பறந்தார்.
3. பரம்பொருளாகிய சிவபெருமானை நோக்கிப் பலகாலம் தவம்
இருந்து பெற்ற வரத்தின் பயன்களை மகேந்திரபுரியில் நேரே கண்டார்.
தவத்தின் மேன்மையைப் போற்றியவாறே பறந்தார்.
4. வேதத்தின் உருவாக விளங்கும் வீரவாகு , சிறையிலே வாடி வதங்கும்,
தேவர்களையும்,சயந்தனையும் கண்டு, ஆறுதலும் ஆறுமுகன் அபயமும்
சொல்வதற்காகச் சிறைச்சாலை அருகே சென்றார்.
5. இழந்துவிட்ட இந்திரபோகமும்,செல்வ வளமும், மங்கையர் போகமும்,
நினைந்து,நினைந்து அழுது வருந்திப் புலம்பும் சயந்தனையும் அவனது புலம்பல் வீணாகிட அரக்கர் கூட்டம் அவனையும்,தேவர்களையும் சித்திர
-வதைப்படுத்தும் காட்சிகளையும் கண்டார் வீரவாகு.
6. சிறையை விட்டு நீன்குவோமா?தாய்தந்தையரைக் காண்போமா? அவர்கள் எங்குள்ளனர்? இழந்த தனது போக வாழ்வு மீண்டும் கிடைக்குமா?
எனத்தெரியாது புலம்பும் சயந்தன், இறைவனை நோக்கி அழுது புலம்பும்
காட்சியையும் அவர் கண்டார்.
7. தேவர்களோடு இணைந்து பரம்பொருளாகிய சிவபெருமானைப்
பலவாறு போற்றும் நிலையைக் கண்டார்.சயந்தன் தன்னைக் காக்கும்
கடவுள் சிவபெருமானே என்றெண்ணிக் கண்ணீருடன் புலம்பலுடன் போற்றத் தொடங்கினான்.
தேவர்களும், அரக்கர்களும் அமுதம் வேண்டிப் பாற்கடலைக்
கடைந்த பொழுது,தோன்றிய ஆலகால விஷத்தைத் தானே உண்டு உலகோரைக் காத்தவனே!எங்களையும் காப்பாற்ற வேண்டி வணங்குகிறேன். உமது சேவடிகளைப் போற்றுகிறேன்.
8. தக்கனை.....ஜலந்தரனைக் ....கூற்றுவனை....அந்தகாசுரனைக் காலத்தில்
அழித்துத் தர்மம் காத்தவனே! அதே கருணை; அதே இறக்கம்; அதே ஆற்றல் கொண்டு எங்களையும் காத்தருள்வாய். உமது பொன்னடிகளை வணங்கக் காத்திருக்கிறோம்.அருள் புரிய வாருங்கள்.
9. குமரன் பிறப்பான்; குறைகள் தவிர்ப்பான் ;அமரர் துயர் அகலும்;
என்றெண்ணித் துயரை மறந்து வாழ்ந்து வருகிறோம்.குமரனே! எங்களைக் காத்திடுவாய்.சிவனே போற்றி என்று புலம்ப்யபடியே
அவனும்,மற்றையோரும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர்.
1௦. அவர்களது கனவில் வந்த கந்தப்பெருமான் கவலை விடுங்கள்.தக்க
காலத்தில் அரக்கனை அழித்து உம்மைக் காப்போம்.எமது தூதுவனாக வீரபாகு அங்கு வந்துள்ளான்.அவன் உங்களுக்கு நல்ல செய்தியும்,மகிழ்வும்
அளிப்பான்" என்று சொல்லி மறைந்துவிட்டார். மகிழ்வோடு விழித்தெழுந்த தேவர்கல்முன் வீரபாகு தோன்றினார்..
விளக்கம்
பானுபுகா =வெப்பம் உள் நுழையாத குளிர்ச்சி மிகுந்த மாளிகைகள்
பானு= சூரியன்
புகா...... ஈறு கெட்ட எதிர்மரைப் பெயரெச்சம்
சிவ வரம்.............ஆறாம் வேற்றுமைத் தொகை
செல்வ வளம் ...இருபெயரொட்டுப் பண்புத்தொகை
கேடு ..................முதனிலை திரிந்த தொழிற்பெயர்
விழு மகன் ...........உரிச்சொற்றொடர்
வெந்துயர் ............பண்புத்தொகை
பெறு போகம் .....வினைத்தொகை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக