மகேந்திரபுரி
1.குற ளில் சிறுத்துக் குணத்தில் உயர்ந்து
நிறைநகர் கண்டனர் வாகு.
2. ஆயிரத்தெட் டண்டங்கள் ஆங்காங்கு ஆய்ந்தநல்
பாயிரம் பாடும் பொருள்.
3. கடல்போல் படைகள், கலைபோல் மலைகள்,
மடல்மண மாடத் தெரு.
4. உணவுண்ட பின்னர் உறுபணித் தேவர்
பணிவால் மகிழும் குலம்.
5. கோள்கள் இடிமின்னல் ஆடிடும் பந்தாகும்,
கோளில் பயணம் குணம்.
6. சூரியனைத் தொட்டெடுத்துச் சூடுறு பிள்ளைகள்
மாறிட வான்கங்கை ஆறு.
7. கூட்ட வோ காற்று; தெளிக்க வருணனே.
காட்டத்தால் காய்க்க நெருப்பு.
8. குபேரன் நிதிக்குவை கொட்டிடும் செல்வக்
குபேர பட்டினம் காண்.
9. காண்போர் நலமுடையோர்; காணார் கடுபிணியார்;
மாண்புடை மகேந்திர நாடு.
1௦. எழுகடல் சூழ்ந்த விழுநகர் சூழும்
பழுதிலாக் கங்கையும் தான்.
பொருள்
1. மூவேழ் கடலையும் பொருளால் உள்ளடக்கிய திருக்குறளைக் காட்டிலும் '
உருவத்தால் சிறுத்தும், முருகனைப்போற்றும் குணத்தால் உயர்ந்தும் விளங்கிய வீரவாகு வானில் பறந்து மகேந்திரபுரியை அடைந்தார்.
அந்நகரின் வளங்களைக் கண்ணாலும்,மனத்தாலும் அளந்தார்.
2. ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆளும் சூரபன்மனின் மாட்சிமையால்
அண்டங்களில் விளைந்த,தோன்றிய,உருவாகிய,உருவாக்கப்பட்ட பொருள்கள் மணிகள்,வைரவைடூரியங்கள்,கலைப்பொருட்கள்,எல்லாம்
குவிக்கப்பட்ட செல்வ நாடாக அது காட்சியளித்தது.
3.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை,பரந்து கிடந்த நால்வகைப் படைகள்
கடல்போல் காட்சியளித்தன.அந்நகரைச் சுற்றி, நான்கு திசைகளிலும்,
அழகும்,வனப்பும் மிகுந்த மரகத மலைகள்,மாணிக்க மலைகள்,என
ஒளிர்விடும் மலைகள் அமைந்திருந்தன.நகர் தெருக்கள் தோறும்,
மலர்ந்து கிடக்கும், மலர்ச்செடிகளின் மலர்க்கொடிகளின் மணம் வானளாவி நறுமணத்தை வீசின.
4. விண்ணவர்கள் சமைத்துப் பரிமாறும் உணவை உண்டு மகிழ்ந்த அரக்கர்கள்,பணிவோடு தேவர்கள் செய்யும் பணிவிடையை ஏற்று மகிழ்ச்சியில் திளைத்தனர்.
5. அரக்கர்களது குழந்தைகள் வானத்தே தோன்றும் மின்னலைப் பிடித்து,
அதனைக்கொண்டு பந்து விளையாடினர்;வானில் பறக்கும் கோள்களைப்
பிடித்து,இழுத்து,அவைகளைப் பந்துபோல் ஆக்கி அம்மானை ஆடினர்.
6. வானத்தே செல்லும் ஆதவனைப் பிடித்த அரக்கர் சிறார்கள் அதனைப் பந்தாக உருட்ட முனையும் பொழுது அவர்களின் கை சூடு தாங்காமல்
தவிக்கையில் தாய்மார்கள் வான் கங்கையை அழைத்து, அதன் குளிர் நீரை
சுடும் இடத்தில் விட்டுச் சூட்டைக் குறைத்தனர்.
7. மகேந்திரபுரித் தெருக்களைத் தூய்மைப் படுத்தினர் தேவர்கள்.வாயு என்னும் காற்று தெருக்களைக் கூட்டினான்.வருணன் நீர் தெளித்தான்.
அக்னியோ தெருவைக் காய வைத்தான்.வீட்டு மென் மாடத்தில் அமர்ந்தபடி
இதனைக் கண்டு களித்தனர் அரக்கர்கள்.
8. குபேரனின் சங்க,பதும நிதிகள் அந்நகரை வந்தடைந்தன.அதனால் செல்வ வலம் மிக்க நாடாக அது விளங்கியது.
9. அந்நகரிலே வளமும் பலமும் பொருந்தியவர்களே காணப்பட்டனர்;
வயோதிகர்கள்,நோயாளிகள் எங்கும் காணப்படவில்லை.
1௦. ஏழு கடல்களும்,கங்கை ஆறும் வற்றாத நல்ல நீரைத் தந்தன.பால்,தயிர்,
கருப்பஞ்சாறு, நெய் ,கள்ளு போன்ற கடல்கள் சோழனது இருந்ததால் அவைகளுக்குப் பஞ்சமே ஏற்படவில்லை.இப்படிப்பட்ட வளமான நகரைக் கண்டார் வீரவாகு.இவையெல்லாம் சூரபன்மனின்
வரத்தின் பயன் என்பதை உணர்ந்தார்.
விளக்கம்
நிறைநகர்......வினைத்தொகை
உறுபணி ....உரிச்சொற்றொடர்
இடிமின்னல் ....உம்மைத்தொகை
விழுநகர் ........உரிச்சொற்றொடர்
பழுதிலா ............இல்லா என்பதன் இடைக்குறை
ஈறு கெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக