அசமுகியின் அவலம்
1.கரம்பற்றிக் கண்ணால் எரித்துக் கலையாள்
சிரம்தொட்டுச் சீறினாள் சூர்.
2.ஆயிரம் அண்டமெல்லாம் காக்கும் அண்ணனின்
மாயமனம் கொண்டவளே வா.
3. அழகுடல் உண்ணவே எண்ணம்; அழகன்
விழைந்ததால் விட்டேன் வினை.
4.பற்றிய பாறைக்கரம் உற்றனள் நற்றுயர்;
மற்றவர் காத்தலை நாடு.
5. ஐயனே! மாகாள! தையலைக் காக்கவா!
பொய்யினாள் மெய்தடுவென் றாள்.
1.கரம்பற்றிக் கண்ணால் எரித்துக் கலையாள்
சிரம்தொட்டுச் சீறினாள் சூர்.
2.ஆயிரம் அண்டமெல்லாம் காக்கும் அண்ணனின்
மாயமனம் கொண்டவளே வா.
3. அழகுடல் உண்ணவே எண்ணம்; அழகன்
விழைந்ததால் விட்டேன் வினை.
4.பற்றிய பாறைக்கரம் உற்றனள் நற்றுயர்;
மற்றவர் காத்தலை நாடு.
5. ஐயனே! மாகாள! தையலைக் காக்கவா!
பொய்யினாள் மெய்தடுவென் றாள்.
6.அபயக் குரல்கேட்டு, ஐயன்மா காளன்
அபயம் அளித்தோடி வரும்.
7. அடாத புரிந்தவள் அக்கரம் வீழ்த்திப்
படாத பாடே படு.
8. வழிகுருதி வண்கரம் வாட்டிட வருந்தி,
அழிகரம் கொண்டே அரற்று.
9. தோழிக்கும் துன்பமே; தொல்லையால் கூச்சலிட்டு
வாழியண்ணன் பொன்னாடு நாடு.
1௦. கையிழந்த தங்கையைக் காணாயோ? கண்டபின்
வையமாளும் வீண்பெருமை காண்.
பொருள்
1. தேவேந்திரன் இந்திராணியைத் தனியே விட்டுச்சென்றதும்,
இறைவனையே எண்ணியபடி இருந்த இந்திராணியைக் கண்ட அஜமுகி
அண்ணன் விரும்பும் அண்ணியை.இநதிராணியைக் கண்ட மகிழ்வில்
கத்தினாள் .அவள் கரத்தைப் பற்றினாள்; அவளது தலையைப் பிடித்து
இழுத்து உலுக்கினாள்;எங்கேடி!இத்தனை நாள் மறைந்திருந்தாய்?என்று
சீறினாள்.
விளக்கம்
கலையாள் ..........அழகுமிகுந்த இந்திராணி
சூர்...........................பேய் போன்ற அஜமுகி;சூரனின் தங்கையான அஜமுகி.
2, அண்டங்கள் ஆயிரத்தையும் ஆள்கின்ற எனது அண்ணன் சூரபன்மனின் மனத்தைக் கொள்ளை கொண்டவளே! வா!வா! உன்னை அண்ணனிடம் அழைத்துச் செல்வேன்;வா! வா! என அஜமுகி ஆர்ப்பரித்தாள்.
3, உனது.அழகான , செழிப்பான உடலை உணவாகக் கொள்ளவே விரும்புகிறேன்.எனினும் உன்னை என அண்ணன் ஆசையோடு விரும்புகிறான்,அதனால் உன்னைக் கொள்வதை விட்டுவிட்டு, அண்ணனிடம் அழைத்துச் செல்லப்போகிறேன். வாடி!என்று அஜமுகி கத்தினாள்.
விளக்கம்
வினை= இந்திராணியைக் கொன்று உண்ணும் செயல் .
4. பாறைபோன்ற வண்மை மிகுந்த கையினால் அஜமுகி இந்திராணியைப் பற்றி இழுத்ததும்,கணவன் பிரிவால் வாடியிருந்த அவள் மேலும் துயருற்றாள்;வாடி வதங்கிய அவள் மனம் மாகாளரை எண்ணியது.தன்னை அவர் காப்பார் என்று கணவன் சொன்ன சொல்லால் மாகாளரை எண்ணத் தொடங்கினாள்.
5, நம்பியவரைக் காக்கும் ஐயனாரின் அருகமர்ந்தவரே! ஐயனுக்கு நிகரானவரே!அபயம் தாருங்கள்; அடியேனைக் காப்பாற்றுங்கள்;
கொடியவளிடமிருந்து என் உயிரையும்,உடலையும் மீட்டுக் காப்பாற்றுங்கள்.
என அஞ்சியபடி வேண்டினாள் இந்திராணி.
6. யாருமற்ற இந்திராணியின் அபயக் குரல் கேட்டு, அவளைக் காத்திட
அபயம் அளிக்க "மாகாளான்" ஓடோடி வந்தான்.
7. மென்மையான இந்திராணியின் கரத்தை வன்மையாகப் பற்றித் துன்புறுத்திக் கொண்டிருந்த அரக்கி அஜமுகியின் வலிமை மிகு கருத்தைத்
தன் உடைவாளால் ஒரே வெட்டாக வெட்டி வீழ்த்தினார் மாகாளர்.அரக்கர் பலரையும் கொன்று வீழ்த்தினார்.
முறையற்ற செயலைப் புரிந்த அஜமுகி துன்பத்தால் துடித்தாள்;
8. தனது கை வெட்டுண்டு கீழே கிடப்பதையும், குருதி வழிந்தோடுவதையும் கண்ட அஜமுகி ஒ" என அலறினாள்;அழுதாள் ;
9. அஜமுகியை மட்டுமல்ல; அவளருகே நின்றுகொண்டு,இருந்த அவளது
தோழி "துன்முகியையும்,"துன்பத்திற்குத் துணை போனதற்காக,அவளது
கையையும் வெட்டி வீழ்த்தியிருந்தார் மாகாளர்.அவளும் அழுது கூச்சலிட்டபடி,நாம் நமது அரசரைச் சந்தித்து ,நடந்ததைக் கூறுவோம்;
உங்கள் அண்ணன் அல்லவா!அவர் நம்மைக் காப்பார்,"போவோம் என்று
கூறினாள் .அதன்படி இருவரும் "இராச மாபுரம் நோக்கிப் புறப்பட்டனர்.
1௦. அண்ணா! இந்த அவலத்தைப் பார்த்தாயா!அண்டமெல்லாம் ஆளும்
உனது அன்புத் தங்கையின் கரத்தைப் பார்!வெட்டுண்டு கிடக்கும் கையைப்
பார்!அகிலமெல்லாம் ஆள்கிறேன் என்று வீண்பெருமை கொண்டவனே!
உனது பெருமைச் சிறுமையாகிச் சிதைந்து போனதை வந்து நேரில் பார்!
அன்று அழுது ஆர்ப்பரித்தபடி அரண்மனைக்குள் நுழைந்தாள் அஜமுகி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக