திங்கள், 23 ஏப்ரல், 2018

                                             இந்திராணி  துயர்

1.   இன்னன    சொல்லியே     தேற்றினான்   இந்திரன் 
      அன்னத்தின்    அச்சம்   அகல்.

2.   பின்னரும்    தன்தனிமை    தன்னச்சம்   தானெடுத்து
      என்னிலை   என்றுரைத்தாள்  மன்.

3.   இனியாளே!  ஏதமெலாம்    இல்லாது     நின்னை
      அணியாகக்   காத்திடுவார்   அவர்.

4.  அன்னவரே    அய்யனார்:  அரிஹர     புத்திரன்.
     சென்னிதாழ்    போற்றின்  செயம்.

5 .  பாற்கடல்     தேனமுதம்   பங்கிட   வந்தமால்
      பேரழகு     மோகினி    பற்று.

6.   பற்றில்லான்    பற்றுற்றான்    உற்றபுணர்     பற்றிருவர்
      முற்றிய   நற்றிருவைப்     போற்று.

7.   கயிலைக்    கடவுள்     கழலிணை   போற்றிச்
      சயமடைக்    கண்ணருள்     காட்டு.

8.   விண்ணவர்    சூழவே    வேந்தன்   விலகிடக்
      கண்பொழி    நீருடன்   சோர்.

9.  கண்டனள்    காரிகை:  காரரக்கன்  கண்ணொளிப்
     பண்ணவள்  பற்றுவேன்  பார்.

10. அஜமுகி    ஆர்ப்பரித்து,  அண்ணீ,எனத்  தொட்டாள்:
      கஜக்கரம்  கான்முல்லை  காண்.
   

                                                       பொருள்
1.  நமது  துயர்  விரைவில்  அகலும்: இறைவ்வன்  நமக்கு  அருள்புரிவான்.
    அதுவரை  பொறுமையாகக் காத்திருப்போம். இப்பொழுதும் எம்பெரு          மானைக்  கண்டு போற்றவே  நான் செல்கிறேன்.நான்  வரும்வரை தனியே
இறைவனை வணங்கியபடி  இருப்பாயாக" என இந்திராணியை சமாதானப்
படுத்தினான் இந்திரன்.

                                                 விளக்கம்
அன்னம் ........உவமை ஆகுபெயர். இந்திராணியைக் குறித்தது.

2.   இந்திராணி, தலைவ!  என்னைப் பற்றி  நினைத்துப்பாருங்கள்.தனியே
      யாருமற்ற  நிலையில் அரக்கர்கள்   என்னைத் துன்புறுத்தினால் என்னிலை  என்னாகும்?அச்சத்தால்  நடுங்குகிறேன். என்னைதனியே தவிக்க
விட்டு விட்டு எங்கும் சென்று விடாதீர்கள்"என இந்திரனிடம் அச்சத்துடன்
முறையிட்டாள்.

3.  இனிய இந்திராணியே!  உன்னைத் தனியாக  விடவில்லை. உன்னைக்
காப்பதற்கு  ஒருவர்   உனக்குத் தெரியாமல்   உன்னோடு   இருப்பார்.
உனக்கு  ஏதேனும் தீங்கு ஏற்படுமாயின்  முன் வந்து உன்னைக் காப்பார்.
நாட்டுமக்களைக்  காத்துரக்ஷிக்கும் கடவுள்  அவர்.கவலற்க. என்றான்.
யாரவர்?என்னபெயர்? என்ற பல வினாக்களை எழுப்பிய மனையாளிடம்
இந்திரன் சொன்னான்.


 4. அவர்தான்  அய்யனார். ஹரி, ஹரர்களின்  புத்திரன். அவரை மனத்தால்
நினைந்து,உளம் உருகப் போற்றினோமானால்  நமக்கு  வெற்றி நிச்சயம்
அவர்  உன்னைக் காப்பார். அவரைப்பற்றி மேலும் சொல்கிறேன்.கேள்.

5.  தேவர்களும்,அரக்கர்களும்  அமுதம்  பெறுவதற்காகப் பாற்கடலைக்
கடைந்தார்கள்.அமுதமும்  வந்தது. அமுதம்   எங்களுக்கே   என இருவரும்
சண்டையிட்டுக் கொண்டார்கள்.அப்பொழுது   அவ்வமுதத்தை க்
கையில்  ஏந்தியபடி   மோகினி தோன்றினாள்.திருமால்  மோகினியாக
அவதாரம் எடுத்து,வந்து, தன் மாயையால்  அரக்கர்களை  மயக்கித்
தேவர்களுக்கு  அமுதத்தை வழங்கினார்.

6. அழகே  உருவான  அந்த மோகினி  மீது  பற்றற்ற  பரமசிவன் பற்று
கொண்டார். பற்றிய  அவ்விருவர்  புணர்வில்  தோன்றினார் அய்யனார்.
அவரைப்போற்றிபுகழ்ந்து  நன்மைகளைப் பெறுவோம்.அவர்  உன்னைக்
காப்பார். என்றான்  இந்திரன்.

7.  இந்திராணி! உன் அச்சத்தை மறந்து  என்னை வழியனுப்பிவை.நான்
சென்று  கயிலைமலை  நாதனாம் எம்பெருமனைப்போற்றி வணங்கி,
நமது துயர் தீர அவரது கருணையை வேண்டிப் பெற்று வருவேன். நாமும் நன்னிலை அடையலாம்."என்றான்.

8.  விண்ணவர் தொடர்ந்து வர   இந்திரன்  கயிலை மலை நோக்கிச் செல்லத்
தொடங்கினான்.கண்ணீரும்,துன்பமும் சேர்ந்து வாட்டத் தனியே  சோகமாக
மெய்மறந்து நின்று கொண்டிருந்தாள்  இந்திராணி.

9.   எனது  அண்ணன் சூரபன்மன்   மனத்தால்  விரும்பிய ,அந்த   இந்திராணியைக்  கண்டுபிடித்து,என் அண்ணன் முன் நிறுத்துவேன்,
எனக் கூச்சலிட்டுக்  கொண்டு  வந்த அசமுகி  சீர்காழி மூங்கில்காட்டிலே
அழகே உருவாய்  அமர்ந்திருக்கும் இந்திராணியைக் கண்டாள்.

1௦. கண்டதும் கத்தினாள். அடேய்!  அண்ணியைக் கண்டுபிடித விட்டேன்
ஒடி வாருங்கள் (அரக்கர்களை   அழைத்தாள்) என்று  கத்தியபடி,
இந்திராணியின் மென்மையான   கரங்களை தனது வன்மையான கையால்
பற்றினாள். யானையின்   துதிக்கையிலே   அகப்பட்ட   முல்லைக்கொடிபோலத் துவண்டாள் இந்திராணி.

                                               விளக்கம்
இப்பாடலில் எடுத்துக்காட்டு   உவமை அணி  பயின்றுள்ளது.
கஜக்கரம் ..........அஜமுகி
கானமுல்லை .......இந்திராணி
போல   என்னும் உவம உருபு   மறைந்து நின்று  பொருள் தருகிறது .அடுத்து    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக