வியாழன், 8 மார்ச், 2018

                                     பரம்பொருளின் பயணமும்,படையெழுச்சியும்

1,   தாரகன்     வீழ்த்திப்   படைகள்    விடுவித்த
      ஆறுமுகன்   சீறடி    போற்று.

2.   அழகிய    ஆலயம்   அந்திவான்    அண்ணல்
      விழாவெடுத்து    விண்ணோர்   வணங்கு.

3.    அசுரேந்த்ரன்    வாயிலாய்    அண்ணன்   அறிந்தான்:
        அசுரப்போர்      ஆய்வுவழி    ஒற்று.

4.    தேவகிரி     தாண்டித்     தரிசிக்கப்    பல்பதிகள்
       தேவதேவன்    பேரருள்   தேடு.

5.    காளத்திக்    காசி,கழுக்குன்றம்   காஞ்சிநகர்
       ஆலவனம்     தில்லையும்   காண்.

6.    சேய்ஞலூர்    செங்கண்ணன்   சங்கார  நற்படை
        சேய்பூஜை    செய்மகிழ்  சேர்.

7.    பராசரப்    புத்திரர்கள்    பாவமது   போக்கிப்
       பரங்குன்றச்   சோதிப்    பரம்.

8.    செந்தூர்    சென்றடைந்து     சீரலைவாய்த்    தங்கிய,
       கந்தன்     கனல்போர்   தொடு .

9.    நந்திசண்டர்   வீரநவர்   முந்திநிற்கும்    படைபூதர்
       வெந்தழல்      செந்தீப்    படை.

19.   இந்திரன்     வியாழன்   எடுத்தார்    வரலாறு,
        தந்திமுகத்    தானவர்      தோற்று.


                                   பொருள்

1.  தனது    மாணிக்க வேலால்   தாரகனை   வீழ்த்தியும், மாயமலையை
அழித்தும்,அதற்குள்  மயங்கியிருந்த   வீரவாகு   முதலிய   பூதப்
படைகளை  விடுவித்தும்,  தேவர்களைக்   காத்த  ஆறுமுகக்    கடவுளை,
திருமால்,நான்முகன்,இந்திரன்   ஆகியோர்   வணங்கியும்,  வாழ்த்தியும்
போற்றிட   முடிவு  செய்தனர்.

2.  கந்தபுரி"  என்னும்   ஆலயத்தை   உருவாக்கி,  முருகனை   அமரவைத்து,
அனைவரும்,வணங்கியும்,,  வாழ்த்தியும்  போற்றி   மகிழ்ந்தனர். வெற்றி
விழா  எடுத்துக்  கொண்டாடினர்.
                                               விளக்கம்
அந்திவான்   அண்ணல் .....செம்மையும், குளிர்மையும்   வாய்ந்த  முருகன்.

3.    தாரகன்   மடிந்தான்  என்ற   செய்தியை,  அவனது   மகன்   அசுரேந்திரன்
வாயிலாக  அறிந்த   சூரபன்மன் ,பலவாறு  புலம்பினான். உடனே   படை
எடுத்துத்   தேர்களை   அழிக்க,ஆயத்தமானான், அமைச்சர்களின்   அறிவுரைப்படி, மாற்றானின்  படைபலம்,வீரம்,இன்னபிற   செய்திகளை
ஒற்றன்  வாயிலாக  நன்கு  அறிந்த  பின்னரே   போர்   என முடிவு செய்தான்.


4.   தேவகிரியில்   சிலநாள்  தங்கிய  முருகன் ,  சிவபெருமான்   அருள்
வேண்டி,அவர்    சிறப்பாக    வீற்றிருக்கும், பல்வேறு  தலங்களுக்குப்  போக
எண்ணினான். அதன்படித்     தந்தையின்  அருள்தேடிப்   புறப்பட்டான்.

5.    காசி,  காளத்தி,  கழுக்குன்றம்,   காஞ்சிபுரம், திரு ஆலங்காடு , சிதம்பரம்  போன்ற  தீர்த்தம்,மூர்த்தி,தலம்   என்ற  மூன்றிலும்  சிறந்து   விளங்கும்  புகழ்மிக்க ஊர்களைக்  கண்டு,இறைவனை  வணங்கி,  அருள்  பெற்றான்.

6.  திருச்சேய்ஞலூர் "  என்னும்  திருத்தலத்தில்  தன்னை   வணங்கிய
முருகன்   மீது  அன்பு கொண்ட   சிவபெருமான்,  சிறப்புமிக்க   "சக்கரப்
படையை,   அரக்கர்களை   வென்றிட  வரமருளி  வழங்கினார்.

7.   சரவணத்தில்   கழுவாய்  பெற்று,இறைவன்  ஆணைப்படி,வாழும்
பராசர  புத்திரர்களின்   வணக்கத்தை   ஏற்று,அருள்பொழியும்   முகத்தோடு
திருப்பரங்குன்றத்தில்   எழுந்தருளினார்.

                                                         விளக்கம்
சோதிப்பரம் ......பரங்குன்றத்தின்   பரம்பொருள்   சோதிமிக்கவராய்   விளங்கினார்.

8.   பற்பலச்   சிவாலயங்களை   வணங்கியபடியே , கடலலை   சீர்மையாய்
மோதும்.திருச்செந்தூர்    வந்தமைந்தார்.  அங்கமர்ந்தபடியே   அரக்கர்களோடு
போர்  புரியத்   துவங்கப்  பலநிலையிலும்,விண்ணவர்களோடு,  ஆய்வு
நடத்தினார்.

9.   நந்தி,சண்டர்   முதலிய    பூதப்படைத்   தலைவர்களும்,வீரவாகு   முதலிய
ஒன்பான்  வீரர்களும்,தேவப்படைகளும் ,  பின்  தொடர,அரக்கரோடு  போர்
தொடர   வழி  வகுத்த  ஊர்   திருச்செந்தூர்  ஆகும்.

10.   இந்நிலையில்,  அரக்கர்கள்   தோன்றிய  வரலாற்றை  முறைப்படி  அறிய
விரும்புவதாக,இந்திரனிடம்  முருகன்  சொல்ல,  இந்திரனோ,  குருபகவானை
அழைத்து,வரலாறு  குறைக்குமாறு   சொல்ல,அவரும்   அரக்கர்  வரலாற்றைக்  கூறத்தொடங்கினார்.

                                                      விளக்கம்
தோற்று.....தோற்றம்   என்பதின்   பகுதி .,
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக