ஒன்று சூரன் ஆட்சி
1.தேவரைத் தாழ்த்தித் தீயவை வாழ்த்தியே
ஆவலில் ஆண்டனன் சூர்.
2, வீதி பெருக்கி, வியன்மணம் தூவினான்
சீத வருணன் காற்று.
3. அரக்கர் அவரவர் இல்லம் அடைந்து
தருநிதி செல்வத் தலை.
4. செம்புலால் சீருணவு ஆக்கியக்னிச் சீரிழை
வம்பர் வணங்கி வழங்கு.
5. நீர்நிலை யாவும் நிலத்தில் தவழ்ந்துபாய்ந்து
சூரரக்கர் பேறுபெறச் சூழ்.
6...விண்ணகம் போலவே மண்ணக மன்னர்கள்
பொன்னடி சார்ந்தார் பணிந்து.
7. இந்திர ஞாலம் இணையிலாச் சீயமொடு
வந்தனன் சூரன் வலம்.
8. வாதாபி இல்வணன் வந்துபோற்றிச் சேர்ந்ததால்
மூதுவேள்வி முற்றும் மறை.
9. அந்தணர் செய்தவம் ஆன்றோர் மந்திரம்
சுந்தரச் சூரனைச் சேர்.
10. அறமது வீழ்ந்தே மறமது சூழ்ந்தே
திறமுடன் ஆண்ட வரம்.
பொருள்
1. விண்ணவரை அடிமைப் படுத்தியும்,தீயவர்களையும் ,தீய எண்ணங்களையும் வளர்த்தும், உலகெல்லாம் தன்னாட்சி என்ற
கர்வத்தில் வாழ்ந்தான் சூரன்,
2. அரக்கர்கள் வாழும் அரண்மனைத் தெருக்களைக் கூட்டவேண்டியது
வாயு" என்னும் காற்றின் வேலை. தூய்மை ஆக்கிய தெருக்களில்
நறுமணம் மிக்க நீர் தெளித்துத் தூய்மை காத்தான் வருணன்.
3. சங்கநிதி,பதும நிதித் தலைவனாகிய குபேரன் நவநிதிகளையும் சுமந்தபடி அரக்கர் வாழும் வீடு வீடாகச் சென்று அவவரவர் விரும்பும்
நிதிகளை அளித்து வந்தான்.
4. புலால் கலந்து நல்ல உணவைச் சமைத்து, தேவமங்கையரோடு
உல்லாசமாக இருந்த அரக்கர்தம் குறிப்பறிந்து அவர்களுக்குப் பணிவுடன்
படைத்து வந்தான் அக்கினி.
5. கங்கை காவிரி போன்ற புண்ணிய நதிகள் அரக்கர்தம் நகருக்குள் அழகுறப்பாய்ந்துவந்து,அவர்தம்மேனியைத்தூய்மைப்படுத்தியதோடு,
புண்ணியப் பேறுகளையும் அளித்தன.
6. விண்ணகத் தேவர்கள் போலவே மண்ணக மன்னர்களும், சூரனை
வணங்கி,அவனது ஏவல் கேட்டு, அதன்படி நடந்தனர்.
7. இறைவனிடம் வரமாகப் பெற்ற இந்திர ஞாலத்தேரில் ஏறி அமர்ந்த
சூரன்,தனது வீரம் மிக்க சிங்கத்துடன் ஆயிரத்தெட்டு அண்டங்களையும்
நொடிப்பொழுதில் சுற்றிவந்து ஆட்சி புரிந்தான்.
8. துர்வாசரை, வலிதே புணர்ந்து அசமுகி பெற்றெடுத்த இல்வணனும் ,
வாதாபியும், சூரனை வணங்கி,அவனோடு சேர்ந்து கொண்டு,வேள்வியை
அழித்தல்,முனிவர்களைப் புசித்தல்,போன்ற தீய செயல்களை வளர்த்து
வந்தனர்.
9. அந்தணர் ஆற்றும் வேள்விப் பலன்கள் சூரனையே அடைந்தன.
முனிவர்களின் தவப்பொருளாகவும் சூரன் விளங்கினான்.
10. வரபலம் பெற்ற சூரன், அறச்செயல்களை அழித்தும், பாவச்செயல்களை வளர்த்தும், முனிவர்களைத் துன்புறுத்தியும்,
தேவர்களை அடிமைப் படுத்தியும் அரசாட்சி புரிந்து வந்தான்.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக