அனுப்புநர் : எஸ்.தேவிவித்யா ,
9.வி.ஜி.பி.ஸ்ரீநிவாஸ நகர்,
இராஜ கீழ்ப்பாக்கம்,
சென்னை...600073
அ .பேசி.9790001891.
பெறுநர் : உயர் திரு.காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர்,
பொருளாதாரக் குற்றப்பிரிவு ..11
தலைமையகம்
கிண்டி
சென்னை.
மதிப்புகெழுமிய ஐயா,
பொருள் ....நகைச்சீட்டு கட்டிய தொகையை,நாதெள்ளா ஜ்வல்லரி
கடையிலிருந்து பெற்றுத் தருவது தொடர்பாக.....
வணக்கம்.நான் இராஜகீழ்ப்பாக்கம் எண் .9.வி ஜி பி ஸ்ரீனிவாச
நகரில் வசித்து வருகிறேன்,எனது மகளின் திருமணப் பயன்பாட்டு
நகைக்காக,சேமிப்பு அமைப்பில் நாதெள்ளா ஜ்வல்லரியில் ஐந்து வருட,
ஒருகிராம் (மாதாமாதம்) திட்டத்தில் சேர்ந்தேன்.சிறு சிறு நகைகள்
வாங்குவதற்குப் பதிலாக,ஐந்து வருடம் சேர்ந்தாற்போல சேமித்து
எடுத்தால் கணிசமான நகைகளை வாங்கலாம்" என்ற எண்ணத்தில்
பல வருட நகை வர்த்தகப் பாரம்பர்யப் பெயர் பெற்ற இந்நிறுவனத்தின்
திட்டத்தில் செப்டம்பர் 2012 ல் சேர்ந்தேன். முறையாக மாதா மாதம்
தவறாது கட்டி ரசீது பெற்றுள்ளேன்.நான் சேர்ந்த திட்டம் 60 மாதங்கள்
2017 ஆக்டோபரில் நிறைவடைகிறது.நடுவில் ஒரு சில மாதங்கள்
கட்ட இயலவில்லை.துரதிருஷ்ட வசமாக,இறுதித் தவணை கட்டும்
பொழுது, அந்நிறுவனத்தை (கடையை) மூடிவிட்டார்கள்.நான் மனம்
உடைந்து போனேன்.உழைத்த பணம் வீணாகப் போய்விட்டதே என
வருத்தத்தில் தவிக்கிறேன்.அதனால் மதிப்பு கெழுமிய ஐயா அவர்கள்
ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டு,எனது பணம், எனக்குக் கிடைக்க,
ஆவன செய்து உதவுமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
23.01.2018
சென்னை..73 என்றும் நன்றியுடன்
(எஸ்.தேவி வித்யா)
979000191
இணைப்பு .
1. தவணைச்சீட்டு நகல்
2.கட்டிய விவரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக