வியாழன், 29 மார்ச், 2018

                                          அகத்தியர்

1.   முனிவர்    முனைவு:  முகில்வானைத்    தொட்ட
      பனிமலை   வீழ்த்த  முனி.

2.   விந்தியக்     கர்வம்    விரல்நுனி   தாழ்த்தினார்,
      செந்தழல்    கண்ணன்   அருள்.

3,...சிவனவன்   சொல்லதை     ஏற்ற    முனிவர்
      சிவப்பணி    நன்னீர்    வரம்.

4.   கமண்டலக்    காவிரி    குள்ளமுனி  கண்டார்
......அமங்களக்     கிரௌஞ்சமலை   ஆங்கு.

5.   மலையுள்      மறைந்த      மனமயக்க   மாயன்
      இலைவேல்    இகலில்    அழி.

6.    கனியாய்    முனிவர்    நனிபசி     ஆற்றி,
       கனிக்கூற்றுக்    கொல்லுயிர்    கூழ்.

7.   இல்வணன்     வாதாபி    இல்லுணவு    உண்டமுனி
      வல்வயிற்றின்    உள்ளே    மடி.

8.   வெகுண்டெழு     வில்வலன்    நற்புல்லால்    மடியப்
      புகுந்தனர்     பூசையால்  வெல்.

9.   கமண்டலக்     காவிரி    காக்கை    கவிழ்க்க,
      கமழ்ந்தது    காழிநகர்க்    கா.

10. சைவ    வைணவ    பேதமதைப்    போக்கியபின்,
      மைவரை    மாமலை   ஏகு.

                                  பொருள்

1.      நாரத முனிவர்   விந்திய  மலையை அடைந்து,."விந்தியமே!  மேருமலையைப்   பார்க்கையில்   நீ  மிக மிகச்  சிறிய மலையாகவே
காணப்படுகிறாய்.  நீ  ஒருபோதும்  அதற்கு  நிகர்   ஆக   மாட்டாய்,"
என்றார்.  அதனைக்  கேட்ட  விந்திய   மலை   "அம்மலையை  வீட
உயர்ந்து  நிற்கிறேன்,  பாருங்கள்"  எனக்கூறி,வானளாவி    வளர்ந்தது.
கோள்களும்,  சூரிய,சந்திரர்களும்   தங்கள்  வழியில்  செல்ல இயலாதவாறு
உயர்ந்து  கொண்டே   போயிற்று.என்ன  சொல்லியும்  கேளாத  விந்தியத்தின்
செருக்கை,வளர்ச்சியை   அடக்க  வல்லவர்   அகத்திய  மாமுனியே
என முடிவுற்ற  விண்ணவர்கள் அகத்தியரை  மனத்தால்  போற்றினர்.

2.   சிவபெருமானின்   அருளைப்பெற்ற    அகத்திய  மாமுனிவர்,வழிவிட
மறுத்த   விந்திய  மலையின்   சிகரத்தலையில்    விரல்   நுனியால்   ஒரு
குட்டு    குட்டினார் .  மலை   பாதாளத்தில்   வீழ்ந்தது.பொலிவும்,உயரமும்
இழந்த  விந்திய   மலை ,  முனிவரிடம்  மன்னிப்புவேண்டி,  தனது  பழைய
நிலையை   அருளவேண்டும்,  எனப்  பணிந்து போற்ற,அகத்தியரும்,
தான்  திரும்பி   வருங்காலை    அந்நிலை  அடைவாய்"  என  அருளினார்.

3.    தென்னகம்   சென்று,  வா!"  என்று  இறைவன்  இட்ட   கட்டளையைத்
தலைமேற்கொண்ட,  அகத்தியர்,  பூசனை    செய்யும்   புனித   நீர் , அருளுமாறு
வேண்டினார்.  இறைவசனும், காவிரியை   அழைத்து,அகத்தியரோடு
செல்வாய்!  அவர்   எங்கு  வளம்  கூட்டச்    சொல்கிறாரோ.அந்நிலத்தில்
பாய்ந்து  வளம்  கூட்டுவாய்" எனவும்  பணித்தார்.


4.   காவிரியைத்   தனது கமண்டலத்தில்   அடக்கிக்  கொண்ட   அகத்தியர்   தென்னகம்   நோக்கிப் பயணம்  தொடங்கினார். வழியில்    மாய  மலை  ஆகிய
கிரௌஞ்ச   மலை   தாரகனின்    மாயத்தன்மையில்   உருப்பெற்றமலை
மாயத் தன்மையால்  பிறர்க்குத்   தீமை  அளிக்கும்  மலை   எதிர்ப்பட்டது.

                                                     விளக்கம்
அமங்களக் கிரௌஞ்சம் .......தீமையே  உருவாகி ,  தீமையே  புரியும் மலை .

5.        தனது   மாய   வழியில்   அவரை   உட்படுத்தியது.
இறையருளால்    வெளியேறிய   முனிவர்,"கிரௌஞ்சமே!  எம்பெருமான்
முருகன்  வேலால்,நீயும்,உன்  மாயமும்    அழிவடைக."எனச்சாபம் இட்டார்

                                                    விளக்கம்
இலைவேல் ...உவமைத்தொகை
இகலில் =   முருகன்  அரக்கர்களை  அழிக்கும்  காலை,  தாரகனை  அழிக்கப்
                        போர்  தொடுப்பார்.அந்தப்போரில் .  இகல்=போர்

6.         அசமுகி    துர்வாசரிடம்  வன்புணர்ச்சியில்  பெற்றெடுத்த   இல்வணன்
வாதாபி   ஆகிய  இருவர்களும்  தவமிருந்து,பிரம்ம   தேவனிடம்   வரங்களைப்
பெற்றனர்.அதன்படி, வழியில்   எதிர்ப்படும்  முனிவர்களை,  வணங்கி,
அவரை  உணவு  உண்ண    அழைப்பார்கள்.அவரும்  முனிவர்கள்போல்
காணப்படும்  இருவரின்  சொல்லை  நம்பி  வருவார்.வாதாபி   உணவுப்பொருளாளாய்   மாறுவான்.கனியாய்,அல்லது,  ஆடாய் , மாறிய
தம்பியை  உணவாக்கி,முனிவருக்குப்   படைப்பான்  இல்வணன்.
முனிவர்   உண்டு  முடித்ததும்,இல்வணன்    வாதாபி!  வெளியே   வா"
என்பான்.முனிவரின்   வயிற்றைக்  கிழித்துக்கொண்டு   வெளியே   வருவான்
வாதாபி. இருவரும்  இறந்துபட்ட  முனிவனை  மகிழ்வுடன்   புசிப்பார்கள்.

                                                        விளக்கம்
கனிக்கூற்றுக்   கொல்லுயிர்  கூழ்.........கனியே    கூற்றுவனாகி, கொல்லும்
உயிரை,  உணவாக  உண்ணுவர்  இருவரும்.
கனிக்கூற்று.........உருவகம்.
கூழ்.= உணவு.

7.   வஞ்சக   வாழ்வு  வாழ்ந்துவந்த     அரக்கர்  இருவரும்,  அகத்தியர்
காட்டு  வழியே   வருவதைக்   கண்ணுற்று,அவர்   அரக்கர்களுக்குத்   தனது
தவபலத்தால்   இழைத்து வரும்    தண்டனைகளை, மனதிலே    எண்ணி,
அவரை   அழிக்க  முடிவு   செய்தனர். வழக்கம்  போலவே  முனிவரைத்
தவ  வேடத்திலே    சென்று  வணங்கி,உணவருந்த    அழைக்கின்றனர்.
வாதாபி   கனியாக  மாறிட,அதனை   உணவாக,  அக்தியருக்குப்  படைக்கிறான்
இல்வணன். சிவநினைவோடு  அதனை  உண்கிறார் அகத்தியர். உண்டு
முடித்த   நிலையில், இல்வணன்   "  வாதாபி   வெளியே   வா"  என  அழைக்கிறான். வயிற்றைத்   தடவி விட்டபடியே,"  வாதாபி  ஜீர்ணோ பவ "
என்று  கூறி,  வாதாபியைத்    தனது  தவ   வலிமையாலும்,இறையருளாலும்,
உணவாகவே   ஜீரணித்து  விடுகிறார்  முனிவர்.

8.    வாதாபி  வயிற்றைக்கிழித்துக் கொண்டு  வெளியே   வருவான்,  என   எதிர்பார்த்த   இல்வணன்   அவர் வராத  நிலைகண்டு,சினந்து,அரக்க   உருவத்தில்  முனிவரை    வெட்டி வீழ்த்த    வாளை  ஓங்குகிறான்.சிறு  தர்ப்பைப்  புல்லை   அவன்மீது   முனிவர்     எறிய ,அது   அவனை   வீழ்த்தி  மாளவைக்கிறது.     தந்தை   துர்வாசரின்    சாபமும், அவர்களது   அடாத
செயல்களும்,அவ்விருவரையும்   அழித்தது. ஆயினும்    அவ்விருவரும்
துர்வாச   முனிவரின்    புதல்வர்கள்   ஆனதால், பிரும்ம ஹத்தி   தோஷம்
அகத்தியரைப்    பற்றிக்கொண்டது.சிவபூஜை    செய்து,அதனைப்   போக்கிக்
கொண்ட   அகத்தியர்   தன்   பயணத்தைக்     தொடங்குகிறார்.

9.   சூரபன்மனுக்கு,  அஞ்சி   மூங்கில்   மரமாய்  மனையாளுடன்    சீர்காழி
என்னும்  ஊரில் இந்திரன்   வாழ்ந்தபடி,இறைவனைப்    பூஜை   செய்து
வந்தான்,  அரக்கர்களின்   அடாத  செயலால்  அவ்வூர்   வறண்டு,வளமற்றுப்
போயிற்று. இந்திரனைப்   பார்க்க வந்த   நாரதர்   அகத்தியர்   காவிரியைக்
கமண்டலத்துள்   அடக்கி,எடுத்து   வருவதைக்   கூறி,   அக்கமண்டலத்தை
நிலத்தில்   கவிழச்செய்தால்   சீர்காழி   வளம்  பெறும் .  இவ்வழி  அம்முனி   வருங்கால   அச்செயல்  செய்தருளுமாறு   விநாயகப்   பெருமானை
வேண்டிவண்ங்கு"  என்று    சொல்ல,இந்திரனும்     அவ்வாறே    வணங்க,
விநாயகர்   ஒரு  காக்கை ஆக    மாறி, முனிவரின்  கமண்டலத்து   மீது
அமர, முனிவர்   அதனை  விரட்டக்     கையை  ஓங்க ,காகமோ
கமண்டலத்தைத்   தட்டிவிட்டது.விநாயகரின்   கருணை    வெள்ளமாய்
மாறி  நிலத்திலே   காவிரி   பெருக்கெடுத்து  ஓடியது.சீர்காழியும்   வளம்  பெற்றது.  வந்தவர்  விநாயகப்  பெருமான்  என்றறிந்த   முனிவரும்,
அவரை  வணங்க, கணபதி   அருளால்  கமண்டலம்  நீர் நிரம்பிடத்    தனது
பயணத்தைக்   தொடங்கினார்.

                                                   விளக்கம்
இப்பாடல்  முற்று   வல்லின  மோனையால்   அமைந்துள்ளது.

10.    வழியிலே   திருக்குற்றாலம்    என்னும்  நகரில்  சைவ   வைணவ 
பேதங்களை    அகற்றி,அகந்தை  கொண்ட  வைணவரை   மாற்றி,
அவ்வூரில்  சிவபிரானுக்கும்   கோயில்  எழுப்பி,வழிபட்டுப்     பொதிகை
மலை  நோக்கித்    தனது   பயணத்தைக்   தொடங்கினார்.

                                                  விளக்கம்
மாமலை.......உரிச்சொற்றொடர்.  அடுத்து    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக