திங்கள், 23 நவம்பர், 2015

இடும்ப கவசம்

                                      இடும்ப கவசம்

                                                     காப்பு
                இடும்பல் இடும்பைகள் ஈடருக்க வந்த
                இடும்பன் கவசமிது;
                ஓம் அகத்தியாசீஷா
                   அறுமுகன் தூதா
அடியேன் வல்வினை
        அகற்றிட வருவாய்.
செகத்தினில்  எங்கும்
        சிறந்து நின்றவனே!
தகதக தகவெனச்
         சாரி நீ வருவாய்!
அண்டமும் பிண்டமும்
          அதிரவே வருவாய்!
மண்டலம் புகழ
           வருவாய்!கடம்பா!
தண்டா    யுதமும்
        தனி நீற்று நெற்றியும்,
வண்டார்  கடம்பா!
         வரவே  சமயம்;
கண்டமும்  மார்பும்,
       கரமிடை  அழகும்,
அண்டர்கள்  போற்றும்
        ஆயுத அழகும்,
எண்டிசை  அதிரவே
          ஏறிய  மிதியடி,
தண்டையும் கொலுசும்
         கரமிடை அழகும்,
அண்டர்கள்  போற்றிய
          ஆயுத  அழகும்,
தண்டா  யுதத்தோடு
          தாண்டி நீ  வருவாய்!
வருவாய்!வருவாய்!
         வல்லிடும்  பேசா!
வருவாய்   பழநி
         மலைக்குக்  காவலா!
இவ்வும்  சவ்வும்
       ஈசனே!அரனே!
அவ்வும்   மவ்வும்
       ஆகிய  பரனே!
சவ்வும்  கிலியும்
       ஐய்யும்  ஆனவனே!
வவ்வும்  உவ்வும்
      மாய்வளர்  துரையே!
அவ்வும் உவ்வும்
        ஆகிய  கோவே!
குறத்தி  மகனே!
       குறவன்   குமரா!
மறத்தி  மகனே!
         வல்லிடும்  பேசா!
ஆறுமா  முகத்தெம்
       அண்ணல்தன்   துணையே!
வீறுடைத்  தேவர்
        வேண்டும்  பொருளே!
இரும்புத்  தடியும்
          இருகைவல்  லயமும்,
சுருட்டு  வாளும்
         தொங்கு  சங்கிலியும்,
எடுத்து   வரவே
          இதுவே  சமயம்;
ராரா   ராரா
      நாயகா  இடும்பா!
ராரா   ராரா
        நமனும்  நடுங்க,
றீரா  றீரா
       ரீங்கார  ஸ்வரூபா!
வாராய்! வாராய்!
      வல்லிடும்  பேசா
வள்ளி  அம்மைதன்
       மைந்தனரே    ராரா
துள்ளிய  நடையும்
       துண்டும்  தடியொடு
முள்ளு  மிதியடி
        முனைமேல்  நின்று,
சமயத்  துரையே!
        சடுதியில்  வருவாய்!
சமயம்   இதுவே
        தமியனை  ரக்ஷியும்;
உபய    தாள்மலர்
     உண்மையாய்  நம்பினேன்;
அபயம்   அரசே!
        அடியனைக்   காக்க;
ஓங்கா   ரத்துடன்
       ஒலிக்கும்   ரீங்காரா !
ஆங்கா    ரத்துடன்
       ஆர்ப்பரித்  தெழுந்து,
ஜல்லடங்   கட்டியே
         சாமிநீ   வருவாய்
பில்லி  சூனியம்
      பெலத்த     ஏவல்கள்
துள்ளிய  சடாமுனி
         சோதி பா  வாடையும்,
பள்ளக்   கருப்பன்
           சாமுண்டி   சாத்தான்
பள்ள     வீரன்
        பத்திர  காளியும்,
மசானக்   கரையில்
         வாழ்ந்திடும்   பிசாசும்,
பிசாசினுக்   கெல்லாம்
         பெருந்தலை   முனியும்,
கருத்த   இருளன்,
    காட்டேரி  யக்ஷணீ
உருத்துப்  பார்க்கும்
      உக்கிர  முனிகளும்,
கொள்ளிய   தேளும்,
        கொடுவிஷப் பாம்பும்,
பலவிட   மெல்லாம்
         பறிந்திட  எரிந்து
பட்டு  பட்டு
         பறிந்திட  எரிஎரி
வெட்டு  வெட்டு
       வேரைக்  களைந்திடு;
முட்டு  முட்டு
     முடுகியே  முட்டு
கொட்டு  கொட்டு
      கூறிடக்  கொட்டு
கட்டு  கட்டு
     கடுகவே  கட்டு
கட்டு   கட்டென்
    மாற்றானைக்  கட்டு;
குத்து  குத்துன்
     கூர்வேல்  முனையால்;
பற்று  பற்று
      பறித்திட்  டோடக்
கண்விழி  பிதுங்கிக்
        கலங்கிட  எரிஎரி
விண்ணோர் புகழும்
       வேலவர்   தூதா!
எரிஎரி  எரிஎரி
     இரணக் களம்போலப்
பறிபறி   பறிபறி
      பாசக் கயிற்றால்
முறிமுறி   முறிமுறி
      மூன்றுதுண்  டாக்கிடு
படுபடு   படுபடு
       பல்லைப்  பிடுங்கிடு
அடிஅடி பிடிபிடி
      இடிஇடி  சுடுசுடு
பார்த்திடும்  பேர்களைப்
      பார்வை  அறுத்திடு
சத்துரு  நாசனத்
      தணலெரி   மூட்டிப்
புத்திரன்  அழைக்கப்
      புனித நீ  வருவாய்!
எங்கிருந்   தாலும்
      என்னெதிர்  வருவாய்!
எங்கிருந்    தாலும்
     என்னெதிரியை  அடக்குக;
சங்கிலி  பூட்டிச்
     சதைத்திடு   எதிரியை;
துங்க   மாமயிலோன்
      தூதா  வா  வா
ஐயா! இடும்பா!
       ஆறுமுகத்   தூதா!
வையா  புரியில்
      வளர்ந்து   நின்றவனே!
வடிவேல்   வாசா!
    மந்திரி    வருவாய்!
அடியே  னழைக்க
       அன்புடன்   வா வா
நற்றாய்  போல
      நயந்து நீ வருவாய்!
வருவீ     ரீசா!
    வல்லிடும்   பேசா!
மேலை  மலைக்கு
     விண்ணிடும்   பேசா!
சோலை  மலைக்குத்
      தோற்றிடும்   வாசா!
பழனியில்   வாசா!
         பங்கய  நேசா!
அரகரா  என்றவுன்
    அடியேனை   இரக்ஷி ;
கடம்பா  என்றிடக்
     காத்து நீ  இரக்ஷி ;
இடும்பா   என்றே
    எந்தன்முன்   வருவாய்!
குற்றம்  இருப்பினும்
       கோபம்   கொள்ளாய்
அடங்கா  சத்துருவை
      அக்கினி  மூட்டிடும்;
அடங்காத பேரைக்
      கூடைத்துவா  யடைத்திடும்;
இணங்காத  பேரை
       எடுத்து   மறித்திடும் ;
வணங்காத  பேரை
       வாளால்   அறுத்திடும்;
ஆங்கார   ஸ்வரூபா!
          அடிஅடி   பிடிபிடி
இடுஇடு  சுடுசுடு
         இதுவே  சமயம்.
இதுவே   சமயம்
        என்றன்முன் வருவாய்!
கடம்பா   சரணம்;
       கதிர்வேலா   சரணம்'
இடும்பா  சரணம்;
        ஈசா  சரணம்;
ஷண்முக   தூதா
        சரணம்   சரணம்;
சரணம்   சரணம்
       தற்காத்   தருளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக